Published : 20 Nov 2016 10:51 AM
Last Updated : 20 Nov 2016 10:51 AM
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு வாக்குசாவடி திருமண வீடுபோல் வாழைமரத் தோரணங் கள், பலூன்கள், மலர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு, உறவினர்களை வரவேற்பதுபோல் தேர்தல் அலு வலர்கள் வாக்குச்சாவடி முன் நின்று வரவேற்று சந்தனம், கற்கண்டு வழங்கி பன்னீர் தெளித்து வாக்குப்பதிவு செய்ய அழைத்துச் சென்றது, வாக்காளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதில் கரடிப்பட்டி, ஹார்விப்பட்டி, விரகனூர், பனையூர் ஆகிய 4 வாக்குச்சாவடிகள் முன்மாதிரி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டன. வாக்குப் பதிவை அதிகரிக்கவும், வாக்கா ளர்களை கவரவும் இந்த முன்மாதிரி வாக்குச்சாவடிகள் ஒவ்வொரு விதங்களில் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டி ருந்தன. ஹார்விப்பட்டி வாக்குச் சாவடி ஏசி வசதியுடன் ஒளிரும் விளக்குகள், காகித மலர்கள், பலூன் களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கரடிப்பட்டி பஞ்சாயத்து அலு வலகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அமருவதற்காக திருமண வீட்டை போல், வாக்குச் சாவடி முன் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு வாழைமரத்தோர ணங்கள் கட்டி, பூக்கள், பலூன் களை கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தன. வாக்காளர்கள் நடந்து செல்ல சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டு வாக்குச்சாவடி முன், வாக் காளர்களை வரவேற்கும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழை மெகா சைஸ் பேனராக வைத் திருந்தனர்.
வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, காத்திருக் கும் அறை உருவாக்கப்பட்டு மணமக்கள் இருக்கைகள் போல் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் வாக்காளர்களுக்காக போடப்பட்டி ருந்தது. அதில், மின் விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு செய்ய வரும் வாக்காளர்கள் எல்லோரையும் வாக்குச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர்கள் மூவர் வாக்குச்சாவடி முன்நின்று, திருமண வீட்டுக்கு வரும் உறவினர்களை வரவேற்பதுபோல் வாக்காளர்களுக்கு சந்தனம், கற்கண்டு கொடுத்து தலையில் பன்னீர் தெளித்து வரவேற்றனர்.
இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலர் காமராஜ் கூறுகையில், வாக்குப்பதிவை அதிகரிக்கவும், வாக்காளர்களை கவரவும் முன் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக் கப்படுகின்றன. இந்த வாக்குச் சாவடியை திருமண வீடு போல் அமைத்துள்ளோம்.
திருமண வீட்டிற்கு சென்றால் ஒரு உறவினருக்கு எப்படி ஒரு மரியாதை, வரவேற்பு, உபசரிப்பு, வசதிகள் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் இந்த வாக்குச்சாவடியில் வாக்காளருக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம். அத னால், காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்குப்பதிவு செய்கின்றனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT