Published : 13 Nov 2016 10:56 AM
Last Updated : 13 Nov 2016 10:56 AM
அடையாள அட்டையைக் காண் பித்து பல்வேறு வங்கிக் கிளை களில் ஒருவரே மீண்டும் மீண்டும் ரூ.4 ஆயிரம் பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித் துள்ளனர்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக வங்கிக் கிளைகள் திறப்பதற்கு பல மணி நேரம் முன்பே, பூட்டப்பட்ட கதவுகளுக்கு முன்பு பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வங்கிக் கணக்கு இல்லாதவர் கள்கூட ஆதார், பான் அட்டை போன்ற அடையாள அட்டை களைக் காண்பித்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியில் தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை நகலுடன் இணைத்து ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரம் வரை மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருமணம் போன்ற இதர முக்கிய செலவு களுக்காக அதிக அளவில் ரொக்க மாக பணம் வைத்திருப்பவர் களுக்கு ரூ.4 ஆயிரம் என்பது மிகவும் குறைவான தொகை என்பதால், இந்த வரம்பை அதி கரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் இதே கோரிக்கையை விடுக்கின்றனர்.
இந்நிலையில், ஒரே வங்கியின் பல கிளைகளிலோ, பல்வேறு வங்கிகளிலோ அடையாள அட் டையை மீண்டும் மீண்டும் காண்பித்து ஒருவரே ரூ.4 ஆயிரத்தைவிட அதிக தொகை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது, ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
எந்த வங்கியிலும் அடை யாள அட்டையைக் காண்பித்து ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற நடைமுறை தற்போது உள்ளது. யார், எத்தனை முறை வாங்கிச் செல்கின்றனர் என்பதெல்லாம் தற்போது கண் காணிக்கப்படுவது இல்லை.
ஒருவரே அதிக தொகை பெற்றுச் சென்றால், மற்றவர்கள் பெறுவதில் சிரமம் ஏற்படும். இதைத் தவிர்க்க, ரிசர்வ் வங்கி மற்றும் சில வங்கிகள் வாடிக்கை யாளரின் கைரேகையை பதிவு செய்யும் முறையை தற்போது கையாண்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலான வங்கிகளில் இந்த வசதி தற்போது இல்லை.
மேலும், மக்களுக்கு ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக, விண்ணப்ப படிவத்துடன் அடை யாள அட்டையின் நகலை வாங்கி வைத்துக்கொண்டு, வங்கிகளில் பணம் மாற்றித் தரப்படுகிறது. அதனால், ஒரே நாளில் இரண்டு மூன்று வங்கிகளுக்கோ, ஒரே வங்கியின் பல்வேறு கிளை களுக்கோ ஒருவரே சென்று ஒவ்வொரு முறையும் ரூ.4 ஆயிரம் என மீண்டும் மீண்டும் வாங்கிச் செல்லும் வாய்ப்பு உண்டு.
பின்னர் அனைத்து வங்கிகள் மற்றும் அவற்றின் அனைத்து கிளைகளிலும் நடந்துள்ள பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து சரிபார்க்கப்படும் பட்சத்தில், யார் யார், எத்தனை முறை, எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு பணம் மாற்றினார்கள் என்ற விவரத்தை தெளிவாகப் பெறமுடியும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT