Published : 14 Sep 2022 03:58 PM Last Updated : 14 Sep 2022 03:58 PM
உணவு வகை முதல் நிதி ஒதுக்கீடு வரை: காலை உணவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ம் தேதி ) மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த பிறகு 16-ம் தேதி அமைச்சர்கள் அவர்களின் மாவட்டங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த 12-ம் தேதி பள்ளி மேலாண்மை குழுவில் விவாதிக்கப்பட்டது.
எவ்வளவு கிராம் (ஒரு குழந்தைக்கு)
மூலப் பொருட்களின் அளவு 50 கிராம்
பருப்பு 15 கிராம்
சமைத்தபின் உணவு அளவு 150 முதல் 200 கிராம்
சாம்பார் அளவு 60 கிராம்
கிச்சடி அளவு 100 கிராம்
சேகரி அளவு 60 கிராம்
உணவு வகைகள்
திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
WRITE A COMMENT