Published : 29 Nov 2016 09:26 AM
Last Updated : 29 Nov 2016 09:26 AM
'கூட்டுறவு வங்கிகள் என்றால் மாநில கூட்டுறவு வங்கிகளும் நகர கூட்டுறவு வங்கிகளும் மட்டுமே' என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் மத்திய கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநில கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் என கூட்டுறவு வங்கிகள் மூன்றடுக்கு முறை யில் தற்போது செயல்பட்டு வருகின் றன. இதில் மத்திய கூட்டுறவு வங்கிகளானது தங்களுக்கு கீழ் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் களை வழங்கும். அந்த சங்கங்கள் தமது உறுப்பினர்களிடம் வைப்பு நிதியை பெறவும் அவர்களுக்கு கடன்கள் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்கங் களுக்கான நிதியானது மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுமைக்கும் 369 மாவட்டங்களில் 13,943 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின் றன. இந்த வங்கிகளில் தற்போ தைக்கு, 2 லட்சத்து 96 ஆயிரத்து 803 கோடிக்கு பொதுமக்களின் வைப்பு நிதி உள்ளது. அதேபோல் இந்த வங்கிகள் 2 லட்சத்து 79 ஆயிரம் கோடிக்கு கடனும் வழங்கி யுள்ளன. தமிழகத்தில் உள்ள 782 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ரூ.22,660 கோடிக்கு பொதுமக்களின் வைப்பு நிதி உள்ளது. ரூ.29,095 கோடிக்கு கடனும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் செல்லாத பணத்தை மாற்றிக் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகள் என்றால் மாநில கூட்டுறவு வங்கிகளும் நகர கூட்டுறவு வங்கிகளும் மட்டுமே என்று ஒரு அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, இது நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவில் இருந்து அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதனால் சர்ச்சை வெடித் துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கை கள் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வந்தன. இனி, ஆளும் கட்சிகள் நபார்டு அனுமதியில்லாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
இதுதொடர்பாக பேசிய சிவ கங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.எம்.கணேசன், "மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஒரே வழி மத்திய கூட்டுறவு வங்கி கள் அனைத்தும் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கிளைகளாக செயல்படும் என தமிழக அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்" என்றார்.
நிதியமைச்சரை சந்திப்போம்
அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பி.பாலகிருஷ் ணன், "1904-லிருந்து நூறாண்டுகள் கடந்து மக்களுக்கு சேவையாற்றி வரும் கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு உதாசீனப்படுத்துகிறது. செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் இப்படியொரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம். அவரிடமிருந்து திருப்தியான பதில் வராவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம். கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படும் மத்திய அர சின் திட்டங்கள் அனைத்தையும் புறக்கணிப்போம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT