Published : 27 Nov 2016 10:39 AM
Last Updated : 27 Nov 2016 10:39 AM
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தடை செய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகளும் சேர்க் கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது. வரும் பொங்கல் அன்று நடத்தவும் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் சில வாரம் முன் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமோ, நடக்காதோ என்ற அச்சம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த தடையை நீக்க ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள், ஒரு புறம் சட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். மற்றொரு புறம், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு கிராமங்களில் காளை களை போட்டிகளுக்கு தயார்ப் படுத்தும் பயிற்சியும், இளைஞர் களுக்கு காளைகளை அடக்கும் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எப்போதுமே ஜல்லிக்கட்டு அனு மதியை எதிர்பார்த்தே இந்த விளை யாட்டுக்கு மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் தயாரா வார்கள். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, ஜல்லிக் கட்டு விளையாட்டை பாதுகாக்க வும், புதுப்புது மாடுபிடி வீரர்களை உருவாக்கவும், பயிற்சிகள் தொடங்கியுள்ளதால் தென் மாவட்ட ஜல்லிக்கட்டு கிராம மக்கள் புது உற்சாகம் அடைந்துள்ளனர்.
நேற்று மதுரை வில்லாபுரத்தில் மாடுபிடிக்க ஆர்வமுள்ள இளைஞர் களுக்கு அனுபவமுள்ள மாடு பிடி வீரர்கள், காளைகளை எப்படி அடக்குவது என்பது பற்றி தத்ரூப மாக ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே மாடுகளை வாடிவாச லில் இருந்து திறந்து விட்டு பயிற்சி அளித்தனர்.
20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர் சுற்றி நின்ற பார்வையாளர்கள் அவர்களை ஆர வாரம் செய்து உற்சாகப்படுத்தினர். அதனால், பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த குதூகலமும், மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் விளையாடிய அனுபவம் ஏற்பட்ட தாக மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பயிற்சி கொடுத்த மாடுபிடி வீரர் மொடக்காத்தான் மணி கூறும்போது, ‘‘இரண்டு ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடக்காத தால் இளைஞர்களிடம் இனி, ஜல்லிக்கட்டு நடக்காது என்ற அவ நம்பிக்கையும், சோர்வும் ஏற்பட்டுள் ளது.
இப்படியே சென்றால், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டும் இந்த தலைமுறையுடன் முடிந்து போக வாய்ப்புள்ளது. எங்களோடு இந்த வீர விளையாட்டு அழிந்து போய்விடுக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவர்களை மாடுபிடி வீரர்களாக்குவதற்கே இந்த பயிற்சி கொடுக்கிறோம்’’ என்றார்.
மாடுகளை எப்படி பிடிக்க வேண்டும்?
‘‘மாடு பிடிப்பது ஏதோ திடீரென்று இறங்கி பிடிப்பது அல்ல. ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகளை அடக்க தைரியம் வேண்டும். அதோடு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியும் அவசியம். ஜல்லிக்கட்டுக்கு காளைகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மாடுபிடி வீரர்களும் முக்கியமானவர்களே. பயிற்சி இல்லாமல் நேரடியாக மைதானத்தில் இறங்கினால் காளைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். உள்ளே இறங்கி மாடுகளை முறையாக பிடிக்க வேண்டும். அதற்காக மாடுபிடி வீரர்களுக்கு உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப்பந்தயம், எந்த இடத்தில் எப்படி மாடுகளை பிடிக்கலாம், மாட்டை பார்த்து ஓட வேண்டும். மாட்டை பார்க்காமல் ஒடக்கூடாது. மாடு எதிர்த்துவந்தால் எப்படி விலக வேண்டும் என்ற பயிற்சிகள் அவசியம்’’ என்கிறார் மணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT