Published : 14 Sep 2022 04:25 AM
Last Updated : 14 Sep 2022 04:25 AM

தென் மாவட்டங்களில் குழந்தைகள் இறப்பை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஏ.வெரோணிகா மேரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் 2018 முதல் 2021 அக்டோபர் மாதம் வரை 4,432 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.

இதில் 261 குழந்தைகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளன. இந்த காலக் கட்டத்தில் சென்னையில் உள்ள குழந்தைகள் நல நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் 45,401 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதில் 137 குழந்தைகள் இறந்துள்ளனர்.

சென்னை குழந்தைகள் நல நிறுவனம் மற்றும் மருத்துவ மனையில் அனைத்து நவீன உபகரணங்களும் உள்ளன. ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் போதுமான வசதிகள் இல்லை.

இதனால் தென் மாவட்டங்களில் குழந்தைகள் இறப்பைத் தடுக்க சென்னையில் இருப்பது போல் குழந்தைகள் நல நிறுவனம் மற்றும் மருத்துவமனையை மதுரையில் அமைக்கவும், அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் நவீன உபகரணங்கள் அமைக்கவும்,

தேவையான எண்ணிக்கையில் குழந்தைகள் நல மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்களை நியமிக்கவும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடர்பாக ஆய்வு செய்ய மாநில அளவில் மருத்துவக்குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசார ணையை 3 வாரங்களுக்கு நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x