Last Updated : 13 Sep, 2022 12:31 PM

3  

Published : 13 Sep 2022 12:31 PM
Last Updated : 13 Sep 2022 12:31 PM

தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற பாலாஜி நாதனுக்குச் சொந்தமான வீடு | படம்: நா. தங்கரத்தினம்

மதுரை: மதுரையில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

திருவள்ளுர் மாவட்டம், மஞ்சகரணை பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு, 300 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்படுவதற்கும், 150 மருத்துவ மாணவர்கள் பயிலுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் மற்றும் மருத்துவர்கள் பாலாஜிநாதன், மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை கோ. புதூர் ஜவஹர்புரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியிலுள்ள, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரான மருத்துவர் பாலாஜி நாதன் வீட்டில் 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவகல்லூரியின் முதல்வராக பாலாஜிநாதன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x