Published : 13 Sep 2022 06:51 AM
Last Updated : 13 Sep 2022 06:51 AM

ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுவிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, அம்புரோஸ்என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசை வியாகுலம், சேசு ஆகிய 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் ஆகஸ்ட் 28-ல்கைது செய்தனர். பின்னர் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்துஉத்தரவிட்டார். அதேசமயம், பறி முதல் செய்யப்பட்ட விசைப்படகு குறித்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x