Published : 15 Nov 2016 07:53 AM
Last Updated : 15 Nov 2016 07:53 AM
சில்லறை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கோயம் பேடு சந்தையில் ஒரு வாரமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை வளாகத் தில் மலர், காய், கனி விற்பனைக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைக்கு தினமும் 50 ஆயிரம் பேர் வந்து செல்வது வழக்கம். ஆனால், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் வரத்து 80 சதவீதம் குறைந்து, சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஒரு வாரமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
காய்கறி சந்தையில் 1900-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் காய்கறி விலைக்கு ஏற்பட ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை விற்பனை நடைபெறும். சில்லறை தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.1 கோடி அளவுக்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. பொதுமக்கள் சிறு வியாபாரிகளை நாடாததால், சிறு வியாபாரிகள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கவில்லை. அப்படியே வாங் கினாலும் 500, 1000 அல்லது புதிய 2000 ரூபாய் நோட்டுகளை நீட்டுகின்றனர். வருவாயை இழக்க விரும்பாமல், வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக இங்கு விற்பனை 80 சதவீதம் சரிந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி விலையை குறைத்தும், வாங்க ஆளில்லை. தக்காளி கிலோ ரூ.6-க்கு விற்கப்படுகிறது. வியாபாரிகள் பலரால், வங்கிக் கடனை முறையாக செலுத்த முடியவில்லை. தொழிலாளர்களும், காய்கறிகளை அனுப்பும் விவசாயிகளும் பழைய நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். அவர்களுக்கு பணத்தை காலத்தோடு கொடுக்க முடியவில்லை.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண, இந்த சந்தையைச் சுற்றி உள்ள வங்கிகளில் வியாபாரி களுக்காக தனி கவுன்ட்டர் தொடங்கி, அதில் ரூ.100 நோட்டு களை தினமும் வழங்க வேண்டும் என்றார்
பழ வியாபாரிகள் சங்கத் தலை வர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையில் 835 பழக் கடைகள் உள்ளன. இங்கு பல கடைகளில் நாள்தோறும் ரூ.4 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். இப்போது ரூ.50 ஆயிரம்கூட விற்பனையாகவில்லை. இதனால் சந்தை வியாபாரிகள் வருவாய் இழந்துள்ளனர். அதுவும் பழைய நோட்டுகளை பெறுவதாலேயே, இந்த அளவுக்காவது வர்த்தகம் நடைபெற்றுள்ளது. வாங்க மறுத்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். பழங்கள் விற்பனை யாகாமல், அழுகி வீணாவதால், வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு உறுப்பினர் (மலர் அங்காடி) கே.எஸ்.வீரமணி கூறியதாவது:
இங்கு 486 மலர் அங்காடிகள் உள்ளன. நாங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவ தில்லை. சிறு வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. இதனால் விற்பனையாகாமல் போகும் பூக்களை வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற் சாலைகளுக்கு, மிகக் குறைந்த விலையில் விற்றுவிடுகிறோம். ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்த கடைகளில் தற்போது ரூ.2,500-க்கு கூட விற்பனையாவதில்லை. இத னால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT