Published : 12 Sep 2022 03:33 PM
Last Updated : 12 Sep 2022 03:33 PM

2011-ல் தேர்வானவர்களின் பட்டியலை 2022-ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்ட தமிழக தேர்தல் ஆணையம்

சென்னை: நகராட்சிகளில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசிதழில் 2022-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக் குழுக்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த நிலைக் குழுக்களுக்கான தேர்தல் நடைபெறும். இந்நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதன்படி 21.11.2011-ல் நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு, ஒப்பந்தக் குழு, நியமன குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் கடந்த செப்டம்பர் 7 தேதியிட்ட தமிழக அரசிதழில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

2011-ம் ஆண்டுக்கு பிறகு சமீபத்தில்தான் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் மற்றும் நிலைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x