Published : 03 Nov 2016 08:41 AM
Last Updated : 03 Nov 2016 08:41 AM
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை மழை - வெள்ளம் சிதைத்துப் போட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. இங்கெல்லாம் மக்களின் இடிந்துபோன வாழ் வாதாரங்களை மீட்டுருவாக்கம் செய்ய அரசாங்கம் என்ன செய் திருக்கிறதோ தெரியாது. ஆனால், இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சத்தமின்றி சாதித்துக் கொண்டிருக்கிறது.
எல்லை காந்தியின் ‘குதாய் கித்மத்கர்’ அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டி 3,000 இளைஞர்களைக் கொண்ட தேசிய இயக்கமாக வழிநடத்தி வருகிறார் புதுச்சேரி யைச் சேர்ந்த இனாமுல் ஹசன். வெள்ளம் வந்தபோது கடலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளே செல்ல முடியாத கிராமங்களுக்கு இவரது அமைப்பினர் தலைத் தூக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர்.
இன்னமும் அந்த மக்களோடு தொடர்பில் இருக்கிறது குதாய் கித்மத்கர். இந்த அமைப்பில் உள்ளவர்களும் இணைந்து நடத்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் 15 இடங்களில் ‘ரிமெடி ஸ்கூல்’ என்று சொல்லப்படும் மாலை நேரத்து நிவாரணப் பள்ளிகளை நடத்தி வருகிறது.
இதுமட்டுமல்ல, செங்கல் சூளைகளில் கொத்தடி மைகளாக இருந்த குழந்தைகள், இருளர் குழந்தைகள் என படிப்புவாசமே அறியாத 80 குழந்தைகளை மீட்டு, சென்னையில் சுயம் அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளியில் கொண்டுவந்து சேர்த் திருக்கிறார்கள். கடலூரில் வெள்ளத்தால் பாதித்த பகுதி களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மென் திறன்களை கற்றுத்தந்து இதுவரை 12 பேரை தனியார் நிறுவனங்களில் வேலைக்கும் அமர்த்தி இருக்கிறார்கள். புதுச்சேரியில் மக்கள் நூலகம் ஒன்றும் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் பேசினார் நிறுவனத்தின் ஆலோசகர் இனாமுல் ஹசன். “வீடு இல்லாத வர்களுக்கு அவர்களது உழைப் பையும் உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களையும் கொண்டு 30 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டிக் கொடுப்பதுதான் எங்களது முதல் நோக்கமாக இருந்தது. அதற்கான டோனர்கள் கிடைத்தும் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்காததாலும், அதை எங்களால் செய்துகொடுக்க முடியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் தாழநல்லூர் என்ற இடத்தில் இருளர் மக்களுக்காக 14 வீடுகளை கட்டும் பணிகள் மட்டுமே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. குறுக்கீடுகள் வந்ததால், வீடுகட்டும் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு அறிவுசார் பணிகளில் எங்களை ஈடுபடுத்தினோம். எங்களது நிவாரணப் பள்ளிகளில் சுமார் 600 குழந்தைகள் படிக்கிறார்கள். அங்கு 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறோம் இவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத் தொகையை நாங்களே தருகிறோம். கோயில், தேவாலய வளாகங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் அந்தப் பகுதி ஆசிரியரின் இல்லங்களில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
படிப்பு மட்டுமல்லாது, தலை மைப் பண்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அந்த ஆசிரியர்களுக்கும் அவர்கள் மூல மாக மாலைநேர பள்ளி மாண வர்களுக்கும் வழங்குகிறோம்.
அடுத்தகட்டமாக கடலூர், புதுச்சேரியில் 7 ‘யூத் கிளப்’களை உருவாக்கி இருக்கிறோம். தங்களின் உரிமைகளை போராடிப் பெறும் அளவுக்கு இந்த ‘கிளப்’புகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உள்ளாட்சி அதிகாரங்கள், அதில் மக்களுக்கான உரிமைகள் இவை பற்றி நாங்கள் எடுத்துச் சொன்னபிறகு, இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தன்னார்வ இளைஞர்கள் பலர் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். எங்களுக்கு இருக்கும் சக்தியைக் கொண்டு 10 மாதங்களில் இவ் வளவுதான் எங்களால் கடக்க முடிந்தது. பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது’’ என்கிறார் இனாமுல் ஹசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT