Published : 10 Oct 2016 11:36 AM
Last Updated : 10 Oct 2016 11:36 AM
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை மக்களை அச்சுறுத்திய போலியோ, டெங்கு, மலேரியா, காசநோய், ரத்தசோகை நோய் களைக் கட்டுப்படுத்தியதில் அந் நோய்களுக்கான விழிப்புணர்வும், முதலுதவி சிகிச்சையும் முக்கிய காரணம்.
ஆனால், மனிதன் தோன்றிய காலம் முதலே பீடித்திருக்கும் மன நோய், இத்தனை காலமாகியும், மருத்துவ வசதிகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்தும் இன்னமும், அதே அச்சமும், விழிப்புணர்வும் இல்லாத நிலையுமே இருக்கிறது.
மன நல சிகிச்சைக்கு நோயாளி கள் விருப்பப்பட்டால் மட்டுமே மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நிலை இருக்கிறது. ஆரம்பக் கட் டத்திலேயே சிகிச்சைக்கு வராமல் நோய் முற்றிய நிலையில் சிகிச் சைக்கு வருவதால் மன நோய் தீர்க்க முடியாததாகவும், மன நோயாளிகள் அபாயகரமானவர்களாகவும் சமூகத்தில் சித்தரிக்கப்பட்டுள் ளனர்.
அதனால், வீட்டில் வைத்து பரா மரிக்க முடியாமல் மன நோயாளி களை சாலைகளிலும், கோயில்களி லும் உறவினர்களே விட்டுச் செல் லும் பரிதாப நிலை தொடர்கிறது.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மன நல மருத்துவ உதவிப் பேராசிரியர் ஆ. காட்சன் கூறியதாவது:
மன நலத்துக்கான முதலுதவி என்பது இந்த ஆண்டு உலக மனநல நாளின் மையக் கருத்தாக செயல்படுத்தப்படுகிறது. ஒரு விபத்து, மாரடைப்பு ஏற்பட்டால் எந்தளவுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதலுதவியை நாடி செல்கிறோமோ அதுபோல, மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, இந்த ஆண்டு மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படு கிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்ட வராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத் துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாது காப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
மன நோய் என்றாலே வித் தியாசமான நடவடிக்கைகளோடு சாலையில் அலைந்து திரியும் மன நல பாதிப்புக்குள்ளானவர் களைக் குறிப்பதாக தவறான எண் ணம் கொண்டுள்ளனர். ஆனால், மன நல பாதிப்பின் அறிகுறிகள் என்பது, சாதாரண தூக்கமின்மை முதல் படபடப்பு, தேவையில்லாத அச்சம், நடவடிக்கைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் முதல் அதிக குழப்பமான மனநிலை வரை குறிக் கிறது. மேலும், பெரிய உடல் நோய் கள் ஏற்பட்டு விடுமோ என்ற பதற் றத்தில் அடிக்கடி பரிசோதனைகள் செய்வது, வலிப்பு மற்றும் மயக்கம் போன்ற உடல் நோய்கள் அறிகுறி களாகக்கூட காணப்படலாம்.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என் பதை ஏற்க மறுத்து மறுதலிப்ப தாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள் ளிப் போடுகின்றனர்.
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படு கின்றனர். அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT