Published : 09 Sep 2022 05:08 AM
Last Updated : 09 Sep 2022 05:08 AM

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த ஆகம முறைப்படி விழா நடத்தும் அமைப்புகள் கருத்து கூறலாம் - அறநிலையத் துறை அழைப்பு

சென்னை: கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு, தமிழ் ஆகம முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி வரும்அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர்சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செந்தமிழ் வேள்விசதூரி முதுமுனைவர் சக்திவேல்முருகனார், சுகிசிவம் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது.

தமிழில் மந்திரங்களை ஓதி,திருக்குட நன்னீராட்டு நடத்தி வரும்அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கோருவது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சம்ஸ்கிருதம் மட்டுமின்றி ஒரே சீராகதமிழில் குடமுழுக்கு நடத்த ஏதுவாக, தமிழ் ஆகம முறைப்படி திருமுறை (சைவ கோயில்கள்), பிரபந்த (வைணவ கோயில்கள்) மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி வரும் அமைப்புகள் கருத்துகளை அளிக்கலாம்.

அந்த அமைப்புகள், செயல்முறைகளை விளக்கங்களுடனும் இதுவரை நடத்திய நிகழ்வுகளுக்கான சான்றுகளுடனும் தங்களது கருத்துகளை இணைத்து ‘ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, உத்தமர் காந்திசாலை, நுங்கம்பாக்கம், சென்னை’என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஆகம முறைப்படி திருமுறை (சைவ கோயில்கள்), பிரபந்த (வைணவ கோயில்கள்) மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி வரும் அமைப்புகள் கருத்துகளை அளிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x