Published : 02 Oct 2016 10:12 AM
Last Updated : 02 Oct 2016 10:12 AM
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பதிவுகளை தமிழக அரசே மேற்கொள்வதை அடுத்து சென்னையில் செயல்பட்டு வந்த ஆதார் நிரந்தர மையங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இதுபற்றிய தகவல் அறியாத பொதுமக்கள் நேற்று ஆதார் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலமே ஆதார் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். யூஐடிஏஐ நேரடியாக ஆதார் பதிவுகளை மேற்கொள் ளக்கூடாது என தமிழக அரசு, மத் திய அரசுக்கு தெரிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை பராமரிக்கும் சென்னை மண்டல மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் அலுவலகமானது, பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட் ரானிக்ஸ் (பெல்) நிறுவனம் மூலமாக தமிழகத்தில் கடந்த 2012 முதல் ஆதார் பதிவை மேற் கொண்டு வந்தது. அந்த விவரங் களைப் பெற்று யூஐடிஏஐ நிறு வனம் ஆதார் அட்டைகளை தயாரித்து விநியோகித்து வந்தது.
ஆதார் பதிவுகளை மேற் கொள்ள மக்கள்தொகை கணக் கெடுப்பு அலுவலகத்துக்கு, தமி ழக அரசு பலமுறை அவகாசம் வழங்கியது. தமிழக அரசு வழங் கிய கடைசி அவகாசம், செப்டம் பர் 30-ம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்னும் 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டி உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட அவகாசம் செப்டம்பர் மாதத்து டன் முடிந்த நிலையில், தமிழ கத்தில் ஆதார் பதிவை மேற் கொள்வதற்கான அனுமதியை, யூஐடிஏஐ இடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏற் கெனவே இயங்கி வந்த ஆதார் பதிவு மையங்கள் நேற்று மூடப் பட்டிருந்தன.
தண்டையார்பேட்டையில் இயங்கிவந்த ஆதார் பதிவு மையத்துக்கு நேற்று வந்தி ருந்த கிருஷ்ணம்மாள் (63) என்ப வர் இதுபற்றி கூறும்போது, “நான் காலை 10 மணி முதல் 12 மணி வரை காத்திருந்தேன். மையம் திறக்கப்படவில்லை. காரணமும் தெரியவில்லை. எந்த தகவலை யும் தெரிவிக்காமல், இவ்வாறு மையத்தை மூடியிருப்பதால், எங்களைப் போன்ற வயதான வர்கள் அலைகழிக்கப்படுகிறார் கள்” என்றார்.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரியிடம் கேட்ட போது, “ஏற்கெனவே ஆதார் பதிவு செய்யும் பணியை மேற் கொண்டிருந்த பாரத் எலக்ட் ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து, பணிகளை எங்களிடம் ஒப்படைக் கும் வேலை நடைபெற்று வருகி றது. அதனால் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் இன்று (சனிக் கிழமை) மூடப்பட்டிருந்தது. திங்கள்கிழமை முதல் அவை முறையாக இயங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT