Published : 18 Jun 2014 10:56 AM
Last Updated : 18 Jun 2014 10:56 AM
புதுச்சேரியில் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்த னர். இதில் தொடர்புடைய சென் னையை சேர்ந்தவர் தலைமறை வாகிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர் பாக டிஜிபி காமராஜ் செவ்வாய்க் கிழமை அளித்த பேட்டி:
புதுவை கிருஷ்ணாநகரைச் சேர்ந்த கல்பனா என்பவரின் மகன் ஹரிஷ் சந்தர் பள்ளி சென்று திரும்புகையில் கடத்தப் பட்டார். கல்பனாவுக்கு வந்த செல் போன் அழைப்பில் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இறுதியில் ரூ.5 லட்சம் தருவதாக பேசி முடிக்கப்பட்டு பணத்துடன் சிறுவனின் குடும்பத்தினர் புறப்பட்டனர்.
செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீஸார் கடத்தல் காரர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பணத்துடன் சென்ற வர்களின் காரை ஒரு டூ வீலர் தொடர்ந்து வந்தது. அந்த டூ வீலர் நம்பர் மூலம் உரிமையாளரை கண்டறிந்து விசாரித்தபோது, அவரது பெயர் சர்வேஸ்வர் (34) என்பது தெரிய வந்தது. அவரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தபோது, புது சாரம் தென்றல் நகரைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவர்தான் கடத் தலுக்கு திட்டமிட்டது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் மேட்டுப்பாளையம் வெங்கடேசன் (32) என்பவர் பணம் தந்து கடத்தக் கூறியதாக தெரிவித்தார். பைனான்சியரான வெங்கடேசன், தொழில் நஷ்டத் தால் சிறுவனை கடத்த திட்டமிட்டு இந்த கும்பலுக்கு பணம் தந்தது தெரியவந்தது.
முக்கிய நபர்களை போலீஸார் பிடித்து நெருக்கியதால் மாண வரை விடுவிக்க கடத்தல் காரர் கள் முடிவு செய்துள்ளனர். எனவே, திண்டிவனம்-மரக் காணம் சாலையில் பெருமக்கள் கிராமத்தில் இருக்கும் கண்ண னின் அத்தை வீட்டில் அடைக்கப் பட்டு இருந்த சிறுவனை வில்லி யனூருக்கு அழைத்து வந்து ரூ.100 தந்து பஸ்ஸில் ஏற்றி விட்டுள்ளனர். சிறுவன் திரும்பி வந்த பிறகு அவனிடம் விசாரணை நடத்தினோம்.
சாரம் கொசப்பாளையம் செல் வம் (34). சாரம் தென்றல் நகர் திருப்பதி (28), வாணரப்பேட்டை இளையராஜா (34) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சென்னை வடபழனி யைச் சேர்ந்த மதன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை தேடி வருகிறது.
தற்போது கைதாகியுள்ள இளையராஜா மீது கொலை வழக்கு உள்ளது. திருப்பதி மற்றும் சர்வேஸ்வர் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன. இது வரை 7 பேர் இந்த கடத்தலில் சம் பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடத்தலுக்கு பயன்பட்ட கார், டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் கொடுத்து சிறுவனை மீட்கவில்லை. ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன் ஒரு மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தி லும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகி றோம். இதுபோல, அடகு கடை யில் நடைபெற்ற கொலை போன்ற முக்கிய வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைத்து துரிதமாக விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT