Published : 24 Oct 2016 10:28 AM
Last Updated : 24 Oct 2016 10:28 AM
சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்சாரம் கிடைக்காத நிலையில் மலைக் கிராம மக்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், சிறு மலை ஊராட்சியில் உள்ளது தாழைக்கடை கிராமம். இந்த கிராமத் தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்துக்குச் சாலை வசதி அமைத்துத் தரப்பட்டுள்ளது. ஆனால், பொது போக்குவரத்து வசதி இல்லை. மலைப் பகுதியில் விளைபொருட்களை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களில் பயணித்து தான் கிராம மக்கள் வெளியூர் களுக்குச் செல்கின்றனர். தபால் நிலையம் கூட இந்த ஊரில் உள்ளது. ஆனால், மின்சாரம் மட்டும் வர வில்லை என்கின்றனர் இக்கிராமத் தினர்.
சுதந்திரம் கிடைத்து 69 ஆண்டு கள் ஆகியும், மின்சாரம் சென்றடை யாத கிராமமாக தாழைக்கடை உள்ளது. பழங்காலத்தைப்போல விளக்கேற்றித்தான் வீட்டுப் பணி களைச் செய்ய வேண்டும். மாண வர்களும் இரவில் படிக்க முடியாது. தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக தாழைக்கடை கிராமத்தினர் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை.
அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த நத்தம் ஆர்.விசுவநாதனின் நத்தம் தொகுதியில்தான் இந்த மலை கிராமம் உள்ளது. தொகுதி எம்எல்ஏ, மின்சார அமைச்சர் என்ற முறையில் அவரிடம் முறையிட் டும் கடைசிவரை பலன் கிடைக்க வில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து தாழைக்கடையில் வசிக்கும் ஆலக்காயம்மாள்(70) கூறியதாவது: நான் பிறந்தது முதல் இந்த நிலைதான். மின்சாரம் இல்லாத கிராமத்தில்தான், கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரு கிறேன். எங்களுக்கு பழகிவிட்டதால் எப்படியோ சமாளித்துவிடுவோம். தற்போது உள்ள தலைமுறையின ருக்குச் சிரமம்தான். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் சாலை அமைத்தனர். மின்சாரம் வந்துவிடும் என பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். இதுவரை வர வில்லை. கிராம மக்கள் தோட்டங் களில் கூலி வேலைக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் பணிமுடிந்து வருவதற் குள் இருட்டி விடும். அதன்பின், இருட்டில் உணவு சமைப்பது சிரமமாக உள்ளது என்றார்.
சோலார் விளக்கு வசதி
இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜக் கண்ணு என்பவர் கூறியதாவது: இங்கு தனியார் நிறுவனம் மூலம் தொலைத் தொடர்பு வசதி ஏற் படுத்தி இருந்தனர். சில ஆண்டு களாக அதுவும் செயல்படுவ தில்லை. தபால் நிலையத்தில் உள்ள வில்போன் மூலமே வெளி யூர்களுக்குத் தொடர்பு கொள்கி றோம். அதுவும், அவ்வப்போது தொடர்பு கிடைப்பதில்லை. சோலார் அமைத்தாவது எங்க ளுக்கு மின்விளக்கு வசதி தர வேண்டும். முதல்கட்டமாக ஊரில் தெருவிளக்காவது சோலார் மூலம் அமைக்க வேண்டும். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் என்றார்.
தாழைக்கடையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது வேளாம் பண்ணை. இந்த கிராமத்தில் பளியர் இனம் எனப்படும் மலை ஜாதியினர் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலும் மின்சார வசதி இல்லை.
இதுகுறித்து திண்டுக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் வினோ தன் கூறியதாவது: தாழைக்கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டு மெனில் 4.5 கி.மீ. தூரத்துக்கு மின்கம்பிகள் அமைக்க வேண்டும். சில இடங்களில் வனப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வனப்பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப்படும். இதற்கு வனத்துறையினர், ‘மின் கம்பிகள் செல்லும் பாதையில் 30 மீட்டர் தூரத்தில் உள்ள மரங்களை வெட்ட இழப்பீடு தர வேண்டும். வேறு பகுதியில் உரிய இடமும் தர வேண்டும்’ என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அவர்கள் அனுமதி பெறுவது சாத்தி யம் இல்லாத நிலை உள்ளது. இதனால், இந்த கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்குதில் சிக்கல் நீடிக்கிறது. இங்கு சோலார் மூலம் மின்சாரம் தர திட்டங்கள் பரிசீல னையில் உள்ளன. எல்இடி பல்புகள் மட்டும் பயன்படுத்த ஏதுவாக சோலார் அமைக்க முயற்சி மேற் கொண்டு வருகிறோம் என்றார்.
அடிப்படைத் தேவை என்பதால், வனத்துறையினர் சில கட்டுப்பாடு களைத் தளர்த்தி மின்சாரம் கிடைக்க ஒத்துழைக்க வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT