Published : 03 Oct 2016 08:43 AM
Last Updated : 03 Oct 2016 08:43 AM

உள்ளாட்சியில் மறுக்கப்படும் அரசியல் அங்கீகாரம்: மனம் கொதிக்கும் மாற்றுப் பாலினத்தினர்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு படிவத்தில் தங்களின் பாலினத்தைக் குறிப்பிடும் ’மாற்றுப் பாலினத்தோர்’ என்ற பத்தி இல்லை என மாற்றுப் பாலினத்தோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

முன் எப்போதும் இல்லாதபடி அண்மைத் தேர்தல்களில் மாற்றுப் பாலினத்தவர்களும் குறிப்பாக திருநங்கைகள் அதிக அளவில் அரசியல் அதிகாரத்துக்கு வருவ தற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்போது உள்ளாட்சி தேர்த லில், திருநங்கைகள் பாரதிகண் ணம்மா, சுதா, நூரியம்மா ஆகி யோர் அதிமுக-விடம் வாய்ப்பு கேட் டிருந்தனர். முக்கியக் கட்சிகள் எது வும் இதுவரை மாற்றுப் பாலினத் தோருக்கு வாய்ப்பளிக்காத நிலை யில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு படிவத்தில் ’மாற்றுப் பாலினத்தோர்’ என்று குறிப்பிடுவ தற்கான பத்தி இல்லை. இது எங்களுக்கான அரசியல் அங்கீ காரத்தை பறிக்கும் செயல் என சர்ச்சையை எழுப்பியுள்ளனர் மாற்றுப் பாலினத்தினர்.

மீறப்படும் நீதிமன்ற ஆணை

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய தமிழக திருநங்கைகள் திருநம்பிகள் உரிமைக்குழு ஒருங்கிணைப்பாளரான திருநங்கை கிரேஸ் பானு, ‘‘உள்ளாட்சிகளுக்கு போட்டியிட எங்கள் தரப்பில் நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், எங்களுக்கான தனியான இடஒதுக் கீடு இல்லாததால் ஆண், பெண் என்ற அதிகார எல்லைகளைக் கடந்து எங்களால் மேலே வர முடியவில்லை’’ என்றார்.

பாலினத்தை தீர்மானிப்பது யார்?

தொடர்ந்து பேசிய இன்னொரு ஒருங்கிணைப்பாளரான திருநம்பி செல்வம், ‘‘உள்ளாட்சி தேர்தலுக் கான வேட்புமனு படிவத்தில் ஆண், பெண் என்ற பத்திகள் மட்டுமே உள்ளன.

மாற்றுப் பாலினத்தோர் என குறிப்பிடுவதற்கான பத்தி இல்லை. அதிகாரிகளைக் கேட்டால் இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. நீங்கள் ஆண், பெண் என உங்களுக்கு இஷ்ட மான பாலினத்தை குறிப்பிடலாம் என்று கூறுகின்றனர்” என்றார்.

வேட்புமனு தள்ளுபடி

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் ‘இதரர்’ என்ற ஒரு பத்தி இருந்த தால் அதை ‘டிக்’ செய்து எனது வேட்புமனுவை தாக்கல் செய் தேன். எனது மனு ஏற்கப்பட்டது. இப்போது மீண்டும் சிக்கலை உருவாக்கி உள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக மாநிலத் தேர் தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடருவோம்’’என்றார் திருநங்கை பாரதி கண்ணம்மா.

இந்தப் பிரச்சினைக்கு பதில் சொன்ன மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, ’’மாற்றுப் பாலினத்தோர் ஆண் அல்லது பெண் என்று தாங்கள் விரும்பும் பாலினத்தை குறிப்பிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். மாற்றுப் பாலினத்துக்காக தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டால் அவர் கள் குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் இப்போது, அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் அவர்கள் போட்டியிட முடியும்’’ என்றார்.

திருநம்பி செல்வம்

கிரேஸ் பானு

பாரதி கண்ணம்மா







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x