Published : 07 Sep 2022 06:30 AM
Last Updated : 07 Sep 2022 06:30 AM

ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில் செப். 10-ல் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில்சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்த அமைப்பின் நிர்வாகிகள், மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர்.

பின்னர், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வின்சென்ட்பால்ராஜ், கு.வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வாழ்வாதாரநம்பிக்கை மாநாட்டில், முதல்வர்மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடியதுடன், முதல்வர் அழைத்துப் பேசவேண்டும் என்று கேட்டபோதுகூட, எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போது முதல்வர் எங்கள் மாநாட்டுக்கு வர உள்ளார். அவர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளை மாநாட்டில் வெளியிடுவார் என்று நம்புகிறோம். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும்இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பள்ளிக்கல்வியில் 107, 108 உள்ளிட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் இயக்குநர் பணியிடத்தைக் கொண்டுவர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களை காலமுறை ஊதியத்துக்குள் கொண்டுவர வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x