Published : 06 Sep 2022 04:00 AM
Last Updated : 06 Sep 2022 04:00 AM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில்(எண்:07120), வரும் 10-ம் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, 12-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர்- கேரள மாநிலம் கொல்லம்இடையிலான சிறப்பு ரயில் (எண்:06501), யஷ்வந்த்பூரிலிருந்து வரும் 7-ம் தேதி (நாளை) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், கொல்லம்-யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06502), கொல்லத்திலிருந்து வரும் 8-ம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையங்களில் நின்றுசெல்லும்.சென்னை சென்ட்ரல்-எர்ணா குளம் இடையிலான சிறப்புரயில்(எண்:06053), சென்னை சென்ட்ரலில் இருந்து 7-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல்இடையிலான சிறப்பு ரயில் (எண்:06054), எர்ணாகுளத்திலிருந்து வரும் 9-ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும். இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி,அரக்கோணம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி-பெங்களூரு கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06052), திருநெல்வேலியிலிருந்து வரும் 10-ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்நிலையம் சென்றடையும். இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x