Last Updated : 27 Oct, 2016 01:16 PM

 

Published : 27 Oct 2016 01:16 PM
Last Updated : 27 Oct 2016 01:16 PM

தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கெடுபிடி: கடைகளை அமைக்க வியாபாரிகள் தயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி தற்கா லிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதால், கடைகளை அமைக்க பட்டாசு வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், இந்த ஆண்டு விற்பனை சரியும் எனக் கூறப்படுகிறது.

தீப்பெட்டித் தொழிலில் தொடங்கி மெல்ல மெல்ல சிவகாசியில் வளர்ந்த தொழில் பட்டாசு உற்பத்தி தொழில். நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், உப தொழில்கள் மூலம் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி மேற் கொள்ளப்படுகிறது. உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் தொழிலா ளர்கள் பலர் பிழைப்புக்கு வேறு வழியின்றி பட்டாசு ஆலையில் பணி புரிகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டு களாக கடத்தல் மூலம் நாட்டு க்குள் கொண்டுவரப்படும் சீனப் பட்டாசுகளால், சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்படைந்துள்ளது. அதோடு, இயற்கை சார்ந்த சூழல் மற்றும் பொருளாதார தேக்க நிலை காரணமாக வட மாநிலங்களில் பட்டாசுகளுக்கான ஆர்டர்கள் குறைந் துள்ளன. இதனால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை குறைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், கடந்த 20-ம் தேதி சிவகாசி பட்டாசுக் கடையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளிலும் வருவாய்த்துறையினர், போலீஸார், தீயணைப்புத்துறையினர் தீவிர சோத னைகளை மேற்கொண்டு வருகி ன்றனர். விதிமுறை மீறல்கள் கண்டறி யப்படும் பட்டாசுக் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குதல், சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டி கைக்கு சீஸன் தொழிலாக தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக் கப்பட்டுள்ளன. குறிப்பாக, வணி கவரித்துறையில் பதிவுசெய் யப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு விற்ப னையாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசுத் தொழில் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் நா.ராசா கூறுகையில், “தீபாவளியையொட்டி ஒரு மாதம் பட்டாசுக் கடை நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு, கோவை, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டுமே ஒரு மாதம் பட்டாசுக் கடை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், மற்ற மாவட்டங்களில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது” என்றார்.

பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் தற்காலிக பட்டாசுக் கடை நடத்துவோர் கூறுகையில், “தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அமைப்பதற்காக வணிகரித்துறையில் பதிவுசெய்ய வேண்டும் என்ற அறிவிப்பால், வியாபாரிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு முன்னதான 3 நாட்களில்தான் பெரும்பாலும் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக வணிகவரித்துறையில் பதிவு செய்து, விற்பனை குறித்து கணக்கு காட்டுவதெல்லாம் மிகவும் சிரமம்.

இதுபோன்ற பல்வேறு விதிமு றைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் பட்டாசுக் கடைகள் தொடங்க வியாபாரிகள் பலர் தயக்கம் காட்டு கிறார்கள். இதனால் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி மட்டுமின்றி பட்டாசு விற்பனையும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x