Last Updated : 02 Sep, 2022 04:28 PM

1  

Published : 02 Sep 2022 04:28 PM
Last Updated : 02 Sep 2022 04:28 PM

“மிகுந்த அச்சுறுத்தலோடு பணிபுரிவது சிறைத் துறையினர்தான்” - அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை: “தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணிபுரிபவர்கள்கள் சிறைத் துறையினர்தான்” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறியது: "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஆறுமுகசாமியின் அறிக்கையை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும். தமிழக அரசு விழிப்போடு இருந்தால்தான் தமிழகத்தில் எங்கெல்லாம் கஞ்சா புழக்கத்தில் இருந்ததோ அவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள் சிறைத் துறையில் இருக்கக்கூடிய காவலர்கள்தான். இது வெளி உலகுக்கு தெரியாது. ஏனெனில், பல வழக்குகளில் குற்றவாளிகள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது. அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக்கொண்டு இருப்பவர்கள் சிறையில் பணியாற்றுபவர்கள். அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுப்பதற்கும், அவர்களது குடும்பத்தைக் காப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறைப் பணியாளர்களிடம் பயங்கரமான செயல்களில் ஈடுபடக்கூடிய கைதிகளை கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் மேல்முறையீடு குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x