Published : 26 Oct 2016 08:33 AM
Last Updated : 26 Oct 2016 08:33 AM

கடல் மார்க்கமாக தடையின்றி வரும் சீன பட்டாசுகள்: அதிகாரிகள் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு

சீன பட்டாசு விற்பனையைத் தடுக்க பட்டாசு கிடங்கு, கடைகளில் அதி காரிகள் சோதனை நடத்துகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம் தான் என்றாலும் கன்டெய்னர்களில் வரும் சீன பட்டாசுகளை துறைமுகத்தி லேயே தடுத்து நிறுத்தாத அதிகாரி கள், தும்பை விட்டு வாலைப் பிடிப்ப தாக வியாபாரிகள் குற்றம்சாட்டு கிறார்கள்.

‘இந்தியர்களுக்கு குரைக்கத்தான் தெரியும்; சீன பட்டாசு விற்பனை யைத் தடுக்க முடியாது’ என்று சீன பத்திரிகை கொக்கரித்த பிறகு, இந்தியா முழுவதுமே சீன பட்டாசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் ‘சீன பட்டாசு விற்கமாட்டோம்’ என வியா பாரிகள் அறிவிப்புப் பலகை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும், மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கியத் துறை முகங்கள் வழியாக சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் வந்துகொண்டு இருப்பதாக பட்டாசு வியாபாரத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர்கள், “சென்னை துறை முகத்துக்கு வரும் சீன பட்டாசுகள் தமிழகம் வழியாக ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கும் வடமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. நாட்டிலேயே மும்பை துறைமுகத்தில்தான் அதிக அளவில் சீன பட்டாசுகள் வந்து இறங்குகின்றன. கன்டெய்னரின் உள் பகுதியில் வெடிகளை வைத்து அதைச் சுற்றிலும் வேறு பொருட்களை அடுக்கி அனுப்புகிறார்கள். அண் மையில் மும்பை துறைமுகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட் டாசுகள் பிடிபட்டதுகூட சரியான நபர் துப்பு கொடுத்ததால்தான் நடந்தது.

பல நேரங்களில் அதிகாரிகளுக் குத் தெரிந்தே கடத்தல் பொருட்கள் துறைமுகத்தை விட்டு வெளியே வருகின்றன. இதில் சீன பட்டாசும் அடக்கம். சிவகாசி பட்டாசுக்கு 14.5 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், எவ்வித கட்டணமும் செலுத் தாமல் கள்ளத்தனமாக இந்தியாவுக் குள் வரும் சீன பட்டாசுக்கு எந்த வரியும் கிடையாது. இதனால், அதிக லாபம் பார்க்கலாம் என்ற சபலம் வியாபாரிகளுக்கும் வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு பொருளை இப்படி எளிதில் உள்ளே விட்டுவிட்டு, பிறகு வியாபாரிகளை அதிகாரிகள் மிரட்டுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல்’’ என்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஒருபோதும் சீன பட்டாசுகள் நமது நாட்டுக்குள் வரமுடியாது. சீன பட்டாசு விற்கக்கூடாது என தமிழகம் முழுவதும் எங்கள் அமைப்பில் உள்ள 5,400 சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம்.

பட்டாசுக் கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்வதில் தவறு இல்லை. ஆனால், சோதனைக்கு வரும்போது பட்டாசுகளை இனாமாக அள்ளிக்கொண்டு போய்விடக் கூடாது. சீன பட்டாசுகளை துறைமுக அளவிலேயே கண்காணித்து பறி முதல் செய்து அதுகுறித்த செய்தி களை அதிகாரிகள் வெளியிட வேண் டும். பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத சீன பட்டாசுகள் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்ப துடன் நமது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது. எனவே இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என்ற நிலைப்பாட்டை பொதுமக்களும் எடுக்க வேண்டும்.

பட்டாசு மட்டுமல்ல; போலி சர்க்கரையும் இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படு கிறது. இந்த போலி சர்க்கரையை கிலோ ரூ.13.50-க்கு சீனா விநி யோகம் செய்கிறது. இப்போது சில சாக்லெட் கம்பெனிகள் மட்டுமே கொள்முதல் செய்யும் இந்த சர்க்கரை சில்லறை சந்தையில் நுழைந்தால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்றார்.

பட்டாசு மட்டுமல்ல; போலி சர்க்கரையும் இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போலி சர்க்கரையை கிலோ ரூ.13.50-க்கு சீனா விநியோகம் செய்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x