Published : 31 Aug 2022 04:36 AM
Last Updated : 31 Aug 2022 04:36 AM
சென்னை: சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட தலங்களை காணும் விதமாக, ‘சார்தாம் யாத்திரை’ என்ற விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில், சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார் ஆகிய புனித தலங்களை காணும் விதமாக,‘சார்தாம் யாத்திரை’க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா சென்னையில் இருந்து அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. 13 நாட்கள் விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.55 ஆயிரம் கட்டணம்.
இதர விமான சுற்றுலாக்கள்
அதேபோல, ஜம்மு-காஷ்மீரின் லடாக், லே நுப்ரா, பாங்காங் லேக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட, செப். 7-ல் விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு ரூ.47,900 கட்டணம் ஆகும்.
ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர், கோனார்க், பூரி ஜகன்நாதர் கோயில், சில்கா ஏரி ஆகியவற்றை காணும் விதமாக, செப்.30-ம் தேதி,சென்னையில் இருந்து விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் சுற்றுலாவுக்கு ரூ.29,800 கட்டணம்.
விமான டிக்கெட், உள்ளூர் போக்குவரத்து, நட்சத்திர ஓட்டலில் தங்கும்வசதி உள்ளிட்டவை இதில்அடங்கும். கூடுதல் தகவலுக்கு 9003140682, 8287931973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment