Published : 07 Oct 2016 11:51 AM
Last Updated : 07 Oct 2016 11:51 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு வார்டுகளில் முறுக்கு, மிட்டாய், பார்சல் சாப்பாடு மற்றும் டீ விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை வாங்கி சாப்பிடும் நோயாளிகள், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தினமும் 3 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவர் ஆலோ சனைப்படியே உள்நோயாளிகள் உணவு சாப்பிட வேண்டும். அதுவும் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி எதுவும் சாப்பிட வழங்கக் கூடாது.
ஆனால், மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சமீப காலமாக ரயில் நிலையம், பஸ்நிலையம், பிளாட் பாரத்தில் உணவுப் பண்டங் களை விற்பதுபோல ஆண், பெண் வியாபாரிகள் கைகளில் பார்சல் சாப்பாடு, டீ, வடை, போண்டா உள் ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள், மிட்டாய்களை வைத்துக் கொண்டு கூவி கூவி தாராளமாக விற்பனை செய்கின்றனர். சிகிச்சையில் இருக் கும் குழந்தைகள், அவர்கள் விற்கும் ஆரோக்கியமில்லாத உணவுப்பண்டங்களை கேட்டு அடம்பிடிக்கின்றனர். பெற்றோர் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் அவற்றை வாங்கிக் கொடுக்கின்றனர்.
நோயாளிகள், இந்த நடமாடும் வியாபாரிகளிடம் டீ, காப்பி, முறுக்கு மற்றும் பார்சல் சாப்பாடு வாங்கி சாப்பிடு கின்றனர். இந்த வியாபாரிகள் லாப நோக்கிலேயே உணவு பண்டங்களை ஆரோக்கியமி ல்லாமல் அவசர கதியில் தயாரி த்து விற்கின்றனர். இவற்றை வாங்கி சாப்பிடும், குழந்தைகள், நோயாளிகள் உடல் நலன் பாதிக் கப்படுகின்றனர். உள்நோயாளிகள் பாதுகாப்பில் அக்கறை காட்டும் அரசு மருத்துவனை நிர்வாகம் வெளியில் இருந்து உணவுப் பொருட்களை விற்க வரும் வியாபாரிகளை கட்டுப் படுத்தாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள், நர்சுகள், உள்நோயாளிகள் பிரிவு காவலாளிகள், இந்த வியாபாரி களை கண்டும், காணாதது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நோயாளிகள் உயிருக்கே ஆபத்து
மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், குழந்தைகள் மருத்துவர் அறிவுரைப்படிதான் உணவுகளை சாப்பிட வேண்டும். கண்ட உணவுகளை சாப்பிட்டால் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். பாதிக்கப்பட்ட நோயின் தீவிரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மஞ்சள் காமாலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டால் அவர்களுடைய சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ஆரோக்கியமில்லாத உணவுகள் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும், என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூவிடம் கேட்டபோது, உள்நோயாளிகள் பிரிவில் வியாபாரிகள் உணவுப்பொருட்களை விற்பது தவறு. அவர்களை பிடித்து போலீஸிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT