Published : 02 Jun 2014 08:12 AM
Last Updated : 02 Jun 2014 08:12 AM

கருணாநிதி தலைமையில் இன்று திமுக உயர்நிலைக்குழு கூடுகிறது: ‘சர்ச்சை பேச்சு கூடாது’ என தடை உத்தரவா?

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யும் வகையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்று உறுப்பினர்களுக்கு ரகசியமாக முன்னெச்சரிக்கை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்து, போட்டியிட்ட 34 தொகுதிகளில் திமுக தோல்வி யடைந்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய, இன்று (திங்கள்கிழமை) உயர்நிலை செயல்திட்டக்குழுவைக் கூட்டியுள் ளது. சென்னை அண்ணா அறிவா லயத்தின் முரசொலி மாறன் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்கு கிறது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். கூட்டம் பிற்பகல் 1.30 மணிவரை நடக்கலாம் என கூறப்படுகிறது.

உறுப்பினர்களுக்கு தடை?

தேர்தல் தோல்வி குறித்து பேசும்போது யாரும் தனிப்பட்ட நபர்கள், குறிப்பாக திமுக பொருளா ளர் ஸ்டாலினின் நிலைப்பாடுகள் குறித்தோ, வேட்பாளர் நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டது குறித்தோ பேசக்கூடாது என்று மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பில் உள்ள உயர்நிலைக்குழு உறுப்பி னர்களுக்கு ரகசியமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

இதேபோல, திமுகவின் உள்கட்சி பிரச்சினைகள், ஸ்டாலின் - அழகிரி பிரச்சினைகள், திமுகவின் குடும்பச் சண்டைகள்தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று பட்டியலிடும் தொனியில் யாரும் தேவையற்ற சர்ச்சை களைக் கிளப்பக்கூடாது என்றும் உயர்நிலைக்குழுவின் பல உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து முன்னெச்சரிக் கையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் மக்கள் மத்தியில் பெரிதாக அறிமுகம் இல்லாதவர்கள். அதிமுக நிர்வாகிகளின் கடின உழைப்பால் அவர்களே வெற்றி பெற்றுள் ளனர். அதேபோல திமுகவிலும் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி கிடைத் திருக்காது என்பது போன்ற பொதுவான கருத்துக்களை சில உறுப்பினர்கள் விரிவாகப் பேசலாம் என்று தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திகள்

‘வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக, துரைமுருகன் ஆதரவாளர்கள் பணியாற்றவில்லை.

திமுக திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டது’ என்று முஸ்லிம் லீக் தரப்பு நிர்வாகிகள் வெளிப்படையாகவே திமுக மேலிடத்தில் கூறியுள்ளார் களாம்.இதேபோல, தென்காசி தொகுதி யில் மாலைராஜா, கருப்பசாமிப் பாண்டியன், ஆவுடையப்பன் கோஷ்டிப் பிரச்சினைகளால் திமுக வினர் சரிவரப் பணியாற்ற வில்லை என்பதால், கடைசி நேரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோள்படி, சென்னையில் இருந்து திமுக நிர்வாகிகள் அனுப்பப்பட்டு, தேர்தல் பணி கவனிக்கப்பட்டுள்ளது.

இவை குறித்து கூட்டத்தில் பேச வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x