Published : 16 Oct 2016 12:09 PM
Last Updated : 16 Oct 2016 12:09 PM
சிறுவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், தான் கண்டுபிடித்த காகித நுண் ணோக்கியை அமெரிக்க பேராசிரி யர் கிராமப்புற பள்ளிகளுக்கு விநியோகித்து வருகிறார்.
கையில் கிடைக்கும் காகி தத்தை நாம் எழுதுவதற்கு பயன் படுத்துவோம்; அல்லது அழகிய கலைநயத்துடன் கூடிய பொரு ளாகவோ, விளையாட்டு சாதன மாகவோ உருவாக்குவோம். ஆனால் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியராக பணிபுரியும் மனுபிரகாஷ் என்ற விஞ்ஞானி, காகிதத்தில் மைக்ரோஸ்கோப் உருவாக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த இவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்து தற் போது அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பொறியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகி றார். இவரது கண்டுபிடிப்பான ஃபோல்ட்ஸ்கோப் (Foldscope) என்ற மடிக்கக்கூடிய நுண்ணோக்கி உலக அளவில் மிகச்சிறந்த கண்டுபிடிப் பாக 2014-ம் ஆண்டு தேர்வு செய் யப்பட்டது.
நுண்ணோக்கி என்றாலே மேல் நிலை வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. பிற மாணவர்கள் அவற்றை பார்க் கும் வாய்ப்புகூட இல்லாமல் நுண் ணோக்கி என்பது அதிசய பொருள் போன்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது. இதனால் ஆரம்பப் பள்ளி மாண வர்களுக்கு நுண்ணோக்கி குறித்த போதிய புரிதல் எதுவும் இல்லை. அனைத்துத் தரப்பினரும் நுண் ணோக்கி பயன்படுத்த முடியும் என்ற நிலையை பேராசிரியர் மனுபிரகாஷ் தன் ஆராய்ச்சியால் உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் மூலம் தமிழ்நாட் டில் 100 பள்ளிகளுக்கு இந்த நுண்ணோக்கி வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. அனைத்து பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பாண்டியராஜன் கூறியதாவது: மடிக்கக்கூடிய இந்த காகித நுண்ணோக்கியை வெளி யிடங்களுக்கு எங்கே வேண்டு மானாலும் நாம் கையிலேயே எடுத் துச் செல்லலாம். இந்த நுண் ணோக்கியின் உதவியால் மிகச் சிறிய ஒரு பொருளை 150 முதல் 500 மடங்கு பெரிதாக்கி பார்க்க முடியும். குழந்தைகள் கூட இலை, முடி, இறக்கை, பேன், கொசு, கரப்பான்பூச்சி உள்ளிட்ட உயிரினங்களின் உடல் பாகங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். இதனால் ஒரு உயிரினத்தின் உடல் பாகத்தை நேரடியாக பார்க்கும் அனுபவம் மாணவர்களுக்கு ஏற்படும்.
கிராமப்புற மாணவர்களுக்காக
தன் கண்டுபிடிப்பை விற்பனை செய்யாமல் கிராமப்புற குழந்தை களிடம் சேர்க்க வேண்டும் என நினைத்த பேராசிரியர் மனு பிரகாஷ், 136 நாடுகளுக்கு 50 ஆயிரம் நுண்ணோக்கிகளை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் 100 நுண் ணோக்கிகளை வழங்கியுள்ளார். மதுரை, தேனி, விருதுநகர் உள் ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 40 நுண்ணோக்கிகளும், பிற மாவட்டங்களில் உள்ள பள்ளி களுக்கு 60 நுண்ணோக்கிகளும் வழங்கப்பட உள்ளன. அவர் அனுப்பியுள்ள ஒவ்வொரு நுண் ணோக்கியிலும் அதனை தயார் செய்யும் முறை, அதில் பிற பொருட்களை இணைத்து பார்க் கும் முறை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
நுண்ணோக்கியை கீழே எறிந் தாலும், தண்ணீரில் நனைத்தாலும் ஒன்றும் ஆகாது. மிகச் சிறந்த கண்டுபிடிப்பான இதனை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து முயற்சிகளையும் பேரா சிரியர் மனுபிரகாஷ் எடுத்துள்ளார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT