Published : 28 Aug 2022 04:59 PM
Last Updated : 28 Aug 2022 04:59 PM
சென்னை:" பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் இருக்கிறது" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "மகளிர் இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. மிகவும் குறிப்பாக பெண்களின் பயணம் 40 சதவீதத்திலிருந்து 60, 62 சதவீதத்தைத் தாண்டி, சென்னையில் 69 சதவீதம் என்கிற அளவுக்கு பெண்களின் போக்குவரத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் கூடுதலாக அமைகின்ற சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. எனவே பெண்களுக்கு தமிழக முதல்வர் வழங்கியுள்ள இந்த இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT