Published : 26 Aug 2022 11:34 AM
Last Updated : 26 Aug 2022 11:34 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை " சிறார் திரைப்பட விழா" என்ற பெயரில் தயாரித்துள்ளது.இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
> அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிட வேண்டும்.
> இந்த திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே திரைப்படங்களை திரையிட வேண்டும்.
> படத்தை திரையிடுவதற்கு முன்பும், திரையிடப்பட்டதற்கு பின்பும் அதுதொடர்பாக மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
> எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்த விவரங்களை கல்வித்துறை அனுப்பும்.
> திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதி தரவேண்டியது கட்டாயம்.
> பள்ளிகள் சிறப்பான இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
> இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT