Published : 03 Oct 2016 09:58 AM
Last Updated : 03 Oct 2016 09:58 AM

இயற்கை சமநிலையை காக்க வனவிலங்குகளை காப்போம்: வன உயிரின பாதுகாப்பு வாரம் கொண்டாட்டம்

பண்டைய காலத்தில் மனிதனுடைய வாழ்வியல் முறைகள், வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளன. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் இயந்திர மயமாகிவிட்டதால் வனவிலங்கு கள், காடுகளின் மதிப்பு தெரிய வில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாது காக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்கு களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந் தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும். அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படு கின்றன.

மத்திய, மாநில அரசுகள் தனி சட்டங்களை உருவாக்கி இந்த காப் பகங்கள் பராமரிக்கப்படுகின்றன. காப்பகங்களினால் சில அபூர்வ இனங்கள் அழிவில் இருந்து மீண்டு புத்துயிர் பெறுகின்றன. தமிழகத் தில் தற்போது 15 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 14 பறவைகள் சரணா லயங்கள் மூலம் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. வன விலங்குளை பாதுகாக்க இது போன்ற சரணாலயங்கள் ஏற்படுத்து வதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அழிந்துவரும் வன உயிரினங்களின் பாதுகாப்பையும், அதன் அவசியத்தையும் மக்களிடம் புரியவைத்து விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். இதற்காக அக்டோபர் முதல் வாரம் வன உயிரின பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ‘வன விலங்குகளுக்காக சேர்ந்து பணிபுரி வோம்’ என்ற நோக்கத்தை முன் வைத்து இந்த ஆண்டு வன உயிரின வாரம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் கூறியதாவது:

இயற்கை சமநிலை மாறுபடா திருக்க வனவிலங்குகளை பாது காப்பது அவசியம். மரங்கள், தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டி யது அவசியம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன.

உலகிலேயே வனவிலங்கு பாது காப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டது. விலங்குகள் வாழ ஒவ் வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25% ஒதுக்கப் பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32% பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள் ளன.

வெங்கடேஷ்

மனிதன் தனது சொந்த தேவைகளுக்காக பல அபூர்வ விலங்கு களையும், தாவரங்களையும் அவற் றின் சுவடுகள் தெரியாதபடி அழித்து விடுகிறான். பெருமைக்காகவும், விற்பனைக்காகவும் வனவிலங்கு களை வேட்டையாடுகிறான். கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங் களும், 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக் கெடுப்பின்படி மேலும் சுமார் 300 இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பென்குவின், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம், யானை, சிங்கம், கரடி, புலி, முதலை, பாம்பு, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில அடியோடு அற்றுப்போகும் நிலையில் உள்ளன. இறைச்சிக்காக பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. விலங் கினம் பற்றிய கல்வியறிவும், ஆராய்ச்சிகளும், மக்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வும் வனவிலங்குகளை பாதுகாக்க உதவிபுரிகின்றன. இதற்காக வன உயிரின வாரம் கொண்டாடப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காடுகளின் அரசனுக்கு வந்த சோதனை

பண்டைய இந்தியாவில் மனிதனுக்குப் பயன்பட்ட விலங்குகளில் பசுவுக்கும், குதிரைக்கும் அடுத்தபடியாக யானை மிகவும் போற்றி பாதுகாக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் ஆசியாவில் பல யானை வகைகள் இருந்ததற்கான சான்றுகள் உண்டு. தற்போது ஆப்பிரிக்க யானை, இந்திய யானைகள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில் காடுகளின் அரசன் என யானைகள் பெருமையாகக் கூறப்பட்டன. தற்போது காடுகளை மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டதால் காடுகளின் அரசன் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. இதனால், ஒருபுறம் வாகனங்களில் அடிபட்டும், மனிதர்களால் சுடப்பட்டும் இறக்கின்றன. மற்றொரு புறம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் நோய் தாக்கி இறக்கின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x