Published : 25 Aug 2022 07:21 AM
Last Updated : 25 Aug 2022 07:21 AM

திருநின்றவூர் அருகே நத்தமேடு கிராமத்தில் எம்ஜிஆர் கோயில் கும்பாபிஷேகம்

ஆவடி: திருநின்றவூர் அருகே நத்தமேடு கிராமத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜை, புனித நீரால் கலசங்களுக்கு நீர் ஊற்றுதல், சிறப்பு அபிஷேகம் என இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஆகம விதிப்படி இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ், எம்.ஜி.ஆரின் அண்ணன் பேரன் எம்.ஜி.சி.பிரதீப், திராவிட இயக்க ஆய்வாளர் துரை.கருணா உட்பட தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எம்ஜிஆரை வணங்கினர்.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நத்தமேடு தொடக்கப்பள்ளிக்கு செஸ் போர்டு, கேரம் போர்டுகள், கைப்பந்துகள், கால்பந்துகள், கூடைப்பந்துகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பால்குடம் எடுத்து வந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. ரத்ததானம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x