Published : 09 Oct 2016 12:07 PM
Last Updated : 09 Oct 2016 12:07 PM

காரைக்குடி அருகே மித்ராவயலில் பசுமைக்குடில் மூலம் செர்ரி உற்பத்தியில் சாதிக்கும் விஞ்ஞானி

வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு இருந்தும், அதைத் தவிர்த்துவிட்டு, ஈரோடு வேளாண் விஞ்ஞானி ஒருவர், காரைக்குடி அருகே மித்ராவயலில் உள்ள தமது நிலத்தில் பசுமைக்குடில் மூலம் செர்ரி விளைவித்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வர் சே.மகேஷ்(40). இவர், விவ சாயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று இஸ்ரேலில் விஞ்ஞானியாக பணியாற்றினார். அங்கு அதிக சம்பளம் கிடைத்தும், அதை தவிர்த்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய முன் வந்தார். அதற்காக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மித்ராவயலில் உள்ள தமது நிலத்தில், பசுமைக்குடில் அமைத்து செர்ரி விளைவித்து பெங்களூரு, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அனுப்பி வருகிறார்.

சொந்த ஊரில் விவசாயம்

இதுகுறித்து, வேளாண் விஞ் ஞானி சே.மகேஷ், ‘தி இந்து’விடம் கூறியதாவது: வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைத்தாலும் மன திருப்தி இருக்காது. எனவே, சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்று தாயகம் திரும்பி னேன். அதற்காக, விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சிப் பகுதியான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மித்ராவயலில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை 6 ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன்.

பசுமைக்குடில் மூலம் விவசாயம் செய்யும்போது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. இதற்காக சுமார் ஒன்றரை ஏக்கரில் அரசு தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக் கத்தின் நிதியுதவியுடன் பசுமைக் குடில் அமைத்தேன். செர்ரிக்கு நட்சத்திர விடுதிகளில் தேவை இருப்பதை அறிந்து, வெளிநாட்டு ரகமான சன்கோல்டு ரகத்தை பயி ரிட்டேன். மண்வளம் நன்றாக இருப்பதோடு தென்னை நார்க் கழிவுகளில் பயிரிட்டு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் உரம், மற்றும் இடுபொருட்கள் இட்டு வளர்க்கப் படுவதால், செடிகள் நன்றாக வளர் கின்றன.

பசுமைக்குடில்களில் மகரந்தச் சேர்க்கை சரிவர நடைபெறாததால், காய்ப்புத்திறன் அதிகம் இருக்காது. சில உயிரியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்ப்புத்திறனை மேம்படுத்துவதால் அதிக விளைச் சல் கிடைக்கிறது. இதே முறையில் பூச்சி, நோய்த் தாக்குதலையும் கட்டுப்படுத்தினேன். விளைவிக் கப்படும் செர்ரியை பெங்களூரு, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு நானே நேரடியாக விற்பனை செய்துவருகிறேன். இத னால், நல்ல லாபம் கிடைக்கிறது.

ஆலோசனைகள் வழங்க தயார்

வறட்சி மாவட்டமான இங்கும் செர்ரியை உற்பத்தி செய்யலாம் என்பதை விவசாயிகளுக்கு உணர்த் தும் நோக்கில் முன்மாதிரியாக பசுமைக்குடில் அமைத்துள்ளேன். இதேபோல் பசுமைக்குடில் மூலம் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கும் இலவசமாக தொழில்நுட்பங்களை வழங்க தயாராக உள்ளேன். குட்டை, நெட்டை ரக தென்னை மரங்கள், மிளகு, நிலப்போர்வை மூலம் கத்தரிக்காய் விவசாயமும் செய்து வருகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x