Published : 23 Oct 2016 01:16 PM
Last Updated : 23 Oct 2016 01:16 PM
என்னதான் பல புதிய பொருட் கள் சந்தைக்கு வந்தாலும், பாரம் பரியத்துக்கு இருக்கும் மரியாதை எப்போதும் குறைவதில்லை. அதி லும் பாரம்பரியமான கைவினைப் பொருட்களுக்கு எப்போது மவுசு அதிகம்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரூரை அடுத்த கருப்புக்கோட் டையைச் சேர்ந்தவர் தம்புரான்(75). தமிழக அரசின் பூம்புகார் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச் சிக் கழகம் சார்பில், ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ என்னும் விருது பெற்றவர். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து இவர் வெளிப்படுத்தும் கலை நுட்பம்தான் இவ்விருது கிடைத்த தற்குக் காரணம். இவரது மனைவி கோலம்மாளும்(73) இவருடன் இணைந்து, இயற்கையான பொருட்களை சேகரித்து கலை பொருட்களாக்குகிறார்.
வாழவைக்கும் கைத்தொழில்
இதுகுறித்து தம்புரான் கூறிய தாவது: எனக்கு 6 பிள்ளைகள். எல்லாருக்கும் திருமணம் முடிஞ்சு பேரன், பேத்தியெல்லாம் எடுத் தாச்சு. அப்ப இருந்து, இப்ப வரை இந்த கைத்திறன் தொழில்தான் என்னை வாழ வைக்குது. இதுதான் என்னோட உண்மையான சொத்து. நான் 4-ம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சுருக்கேன். என் அப்பா விவசாயம் பண்ணாங்க.
நான் இளவட்டத்துல தறி அடிக்க போவேன். அங்கதான் டிசைன் போட கத்துக்கிட்டேன். அப்போ இதுல ஏதாவது புதுமையா செய்யணும்னு யோசிச்சேன். ஈத்தல், குடை பனை நார், கோரம்புல், சம்பைபுல், ஆகா யத் தாமரை, வாழை நார் என, பொதுமக்களால் கவனிக்கப்படா மலும், சீண்டுவார் இல்லாம லும் கிடந்த இயற்கை பொருட் களைக்கொண்டு மேஜை விரிப்பு செய்ய ஆரம்பிச்சேன். இது 50 ரூபாய் வரை விலை போகுது.
கண்காட்சிகளில் பங்கேற்பு
இயற்கையாகவே நீர் ஆதாரங் களில் தானாகவே வளர்ந்து நிற்கும் பொருட்களைக்கொண்டு இதனை தயார் செய்வதால் மூலப்பொருள் செலவு இல்லை. அதே நேரத்தில் இதனை வயதான காலத்தில் என்னால் குளத்தில் இறங்கி பறிக்க முடியாது. அதனால், பறிப்புக் கூலி மட்டும்தான். நானா சுயமா தொடங்குன இந்த முயற்சி எனக்கு நல்லாவே கைகொடுத்துச்சு. இந்த தொழிலுக்கு வந்து முழுசா 53 வருசம் ஆகிடுச்சு. இந்தியா முழுதும் பல கண்காட்சிகளிலும் அரசு சார்பில் பங்கெடுத்துருக்கேன்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
தொடக்கத்தில் இந்த தொழிலில் வளமான வருமானம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் இங்க இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செஞ்சுட்டு இருந்தோம். ஆனால் இப்போது வெளிநாட்டில் அவர்கள் கேட்கும் விலைக்கு செய்து கொடுப்பது கட்டுப்படியாக இல்லை.
எங்கள் பகுதியைச் சுற்றி பத்துக் கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் நடவு, அறுவடை பணிகள் போக மற்ற நேரங்களில் பெண்களுக்கு வேறு தொழில் இல்லை. அதனால, இந்தப் பகுதி பெண்களுக்கு இலவச மாகவே கைத்திறன் பயிற்சியை சொல்லித் தர்றோம்.
பயிற்சியின்போது, அவர்கள் தயாரிக்கும் பொருளுக்கு உரிய சம்பளத்தையும் வழங்கிவிடு கிறோம். மிதியடி தயாரிப்பின் மூலம் இப்போது நானும், என் மனைவியும் சேர்ந்து ஒரு நாளுக்கு தலா ரூ.140 வரை சம்பாதிக்கிறோம். அந்த பணத்தையும் இக்கலையை பரப்பவே பயன்படுத்தி வருகிறோம்.
இதுபோக ஆர்டரின் பேரில் டேபிள் மேட் செய்து கொடுக் கிறோம். கைவினைக் கலைஞர் களுக்கான பென்ஷன் கிடைக்க அரசு வழிவகை செய்தால் வாழ் வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT