Last Updated : 07 Oct, 2016 11:53 AM

 

Published : 07 Oct 2016 11:53 AM
Last Updated : 07 Oct 2016 11:53 AM

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்குள் பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமிக்க வலியுறுத்தல்

பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய நகராட்சிகள் முதல்நிலை நகராட் சிகளாகவும், ராமேசுவரம், கீழக் கரை நகராட்சிகள் மூன்றாம் நிலை நகராட்சிகளாகவும் உள்ளன. பரமக்குடி நகராட்சி ஆணையராக இருந்த கண்ணன் சில மாதங்க ளுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதை யடுத்து நகராட்சி பொறியாளர் குணசேகரன் ஒரு மாதத்துக்கு முன்பு மாற்றப்பட்டார். அதனால் அந்த நகராட்சியில் ஆணையர், பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. நகராட்சி அலுவலக மேலாளர் ராஜேஸ்வரி பொறுப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார். இவரே நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வருகிறார்.

மாவட்டத்தில் பரமக்குடி நக ராட்சி அதிக மக்கள் தொகை கொண்டது. இங்கு தேர்தல் அலு லராக செயல்படும் ஆணையர், உதவித் தேர்தல் அலுவலராக செயல்படும் நகராட்சி பொறியாளர் பணியிடங்கள் தேர்தல் நேரத்திலேயே காலியாக உள்ளன.

கீழக்கரை நகராட்சி ஆணையா ளராக இருந்த மருது, 4 மாதங் களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்த நகராட்சியின் பொறுப்பு ஆணையராக, காரைக்குடி நகராட்சி ஆணையர் செயல்பட்டு வந்தார். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காரைக்குடி நகராட்சி ஆணையர் பொறுப்பு விடுவிக்கப்பட்டு, கீழக் கரை நகராட்சியின் தலைமை எழுத்தர் சந்திரசேகர், பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார்.

தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக ஆணையர்களே செயல்படுவர் எனத் தெரிந்தும், நகராட்சி நிர்வாக ஆணையரகம், இந்த இரண்டு நகராட்சிகளிலும் ஆணையர்களை இதுவரை நியமிக்கவில்லை. இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, வளர்ச்சிப் பணி கள் நடைபெறுவது தடைபட்டுள் ளது. மேலும் நடைபெற்ற பணிகள் உள்ளிட்ட பல்வேறு இனங்களின் பில்களுக்கு பணப்பட்டுவாடா காலதாமதமாகி வருகிறது.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண் டும் தேர்தல் அறிவிப்பு வெளியா வதற்குள் பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளில் தேர்தல் அலுவலர் களாக செயல்படும் ஆணையர் களை நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் கோரினர்.

பரமக்குடியைச் சேர்ந்த பாஜக தொண்டர் பரமேஸ்வரன் கூறும் போது, நகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்தவும், திடமான முடிவுகளை எடுக்கவும் நிரந்தர ஆணையர் இருக்க வேண்டும். பொறுப்பு ஆணையரால் திடமான முடிவுகள் எடுக்க முடியாது. அதனால் தேர்தலுக்குள்ளாவது இங்கு ஆணையரை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x