Published : 23 Aug 2022 05:31 PM
Last Updated : 23 Aug 2022 05:31 PM
சென்னை: அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,
நகர்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்டுப்பத்த மத்திய அரசு புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் மூலம் (அம்ருத்) நிதி உதவி வழங்கி வருகிறது.
குடிநீர் குழாய் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், கழிவு நீர் சுத்தகரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு இந்த அம்ரூத் திட்டத்தில் முக்கியத்துவம் அளித்து நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இதன்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ளிட்ட ஒரு சில நகராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் தற்போது வரை நாடு முழுவதும் 2740 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 128 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3504 எம்எல்டி கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 154 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி மொத்தம் 6245 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 282 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் 449 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 12 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 114 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் 4 நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. 335 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 8 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment