Published : 13 Oct 2016 02:28 PM
Last Updated : 13 Oct 2016 02:28 PM
சிவகங்கை நகராட்சியை ஒட்டியுள்ள காத்தாட்டி கண்மாய் பாசன விவசாயிகள் போதிய தண்ணீர் வசதியில்லாததால் மழைநீரோடு கலந்த நகராட்சி கழிவுநீரில் விவசாயப் பணிகளை மேற் கொண்டுள்ளனர்.
சிவகங்கையில் மதுரை - தொண்டி சாலையில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அருகே செக்கடி ஊருணியும், இதனருகே மறிச்சுகட்டி கண்மாயும் உள் ளன. செக்கடி ஊருணியில் நகராட் சியின் கழிவுநீர் கலக்கிறது. சில நாட்களுக்குமுன் மழை பெய்ததைத் தொடர்ந்து செக்கடி ஊருணியில் நிரம்பிய மழைநீர் கலந்த கழிவுநீர், மறிச்சுக்கட்டி கண்மாய்க்கும், அங்கிருந்து காத்தாட்டி கண்மாய்க்கும் சென் றடைந்துள்ளது. காத்தாட்டி கண்மாயை நம்பி 160 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. பருவ மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் நாற்றங்கால் அமை த்து தயார் நிலையில் இருந் தனர்.
போதிய மழை பெய்யாததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள், காத்தாட்டி கண்மாயில் உள்ள கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்தி உழவுப்பணிகள், நாற்று நடும் பணியை தொடங் கியுள்ளனர். கடந்த சில நாட்களில் 30 ஏக்கரில் நெல் நடவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காத்தாட்டி கண் மாயைச் சேர்ந்த விவசாயி கருப்புச் சாமி கூறியதாவது: பருவமழையை எதிர்பார்த்து நாற்றங்கால் அமை த்தோம். மழை தள்ளிப்போவதால் ஏமாற்றமடைந்தோம். மழைநீரோடு நகராட்சி கழிவுநீரும் கலந்து சிறிதளவு காத்தாட்டி கண்மாய்க்கு வந்துள்ளது. அந்த கழிவுநீர் கலந்த தண்ணீரை வைத்து விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளோம். கழிவுநீர் துர்நாற்றம் வீசு கிறது, உடம்பெல்லாம் அரிப் பெடுக்கிறது.
இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ளோம். பருவ மழை பொய்த்தால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற கவலையில் உள்ளோம் என்றார்.
சிவகங்கையில் கழிவுநீர் கலந்த தண்ணீரில் நெல் நடவு பணியை மேற்கொள்ளும் விவசாயத் தொழிலாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT