Published : 13 Oct 2016 10:13 AM
Last Updated : 13 Oct 2016 10:13 AM

சணல் பொருட்கள் தயாரிப்பை அரசு மேம்படுத்த வேண்டும்: உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

செடி வகையைச் சேர்ந்த சணல், சுமார் 20 அடி உயரத்துக்கு வளரும். அதை வெட்டி, ஊற வைத்து, அதில் இருந்து சணல் நார், நூல் தயாரிக்கின்றனர். வங்க தேசம், பர்மா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் மேற்கு வங்கத்திலும் சணல் விளைகிற து. எனினும், வங்கதேசம், மேற்கு வங்கத்தில் அதிக அளவில் சணல் விளைகிறது.

இந்தியாவில்தான் சணலைப் பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிகம் உருவாக்குகின்றனர். சணல் நாரில் இருந்து கைவினைப் பொருட்களான பொம்மைகள், அறை தடுப்புகள் , ஊஞ்சல் உள்ளிட்டவையும், சணல் நூலில் இருந்து பலவகை துணிகள், கயிறு, கோணி ஆகியவற்றையும் தயாரிக்கின்றனர். நாரின் தரம் அதிகரிக்கும் அளவுக்கு விலையும் அதிகமாக இருக்கும்.

கேரளா முன்னிலை

இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் இருந்துதான் சணல் மூலம் அதிக ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. சணல் மூலம் தரை விரிப்புகள் அதிக அளவில் தயா ரிக்கப்பட்டு, பல்வேறு நாடுக ளுக்கு அனுப்பப்படுகின்றன. எனினும், தமிழகத்தில்தான் சணல் மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உரு வாக்கப்படுகின்றன. சணலுடன் பருத்தி, நூல் உள்ளிட்டவற்றை கலந்து, கைப்பை, திரைச்சீலை, கார் இருக்கை துணிகள், ஷூவின் மேலடுக்கு, ஷோபா கவர் உள்ளிட் டவை தயாரிக்கப்படுகின்றன. அதேபோல, தமிழகத்தில்தான் பல்வேறு டிசைன்களில் பைகள் உருவாக்கப்படுகின்றன.

சென்னை அனகாபுத்தூரில் சணல், வாழைநார், பருத்தியை இணைத்து, சேலைகள் நெய்யப் படுகின்றன. கற்றாழை நாருடன் சேர்த்தும் சேலைகள் தயாரிக்கப் படுகின்றன. இவ்வாறு தயாரிக் கப்படும் பல்வேறு பொருட்கள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொல்கத்தாவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய சணல் வாரியம், சணல் பொருட்களைச் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக்கு மானியம் வழங்குகிறது. தென்னிந்தியாவில் சணல் வாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படுகிறது.

உள்நாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில் சணல் பொருட்கள் அரங்கு அமைக்க 100 சதவீத மானியமும், வெளிநாடு களில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க, விமானக் கட்டணம் மற்றும் தங்கும் செலவில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இயற்கைக்கு உகந்த, மக்கும் தன்மையுடைய சணல் பொருட் களின் பயன்பாடு தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்பு ணர்வு இல்லை.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால், சணல் பைகளைப் பயன்படுத்துவது குறைந்துவருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடையும், கட்டுப்பாடும் விதிக்கும் அரசு, அதற்கு மாற்றாக சணல் பொருட்களைப் பிரபலப்படுத்துவ தில்லை என்றும், சணல் தொழில் மேம்பாட்டில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்றும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகிறது.

இது தொடர்பாக தென்னிந்திய சணல் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஆர்.பி.சீனிவாசன், பொருளாளர் வி.பூபால் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சணல் பொருட்களை மேம்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் அரங்குகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். அரசு சார்பில் நடத்தப் படும் கண்காட்சிகளில் சணல் உற்பத்தியாளர்களுக்கு அரங்கு கள் ஒதுக்க வேண்டும். சணல் பொருட்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில், சணல் பொருட்கள் மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்க ளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான், இத்தொழிலில் ஈடுபட நிறைய தொழில்முனைவோர் முன்வரு வார்கள். வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் நூலுக்கான வரியைக் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் மாசு ஏற்படுத்தாத சணல் பொருட்களின் மேம்பாட் டுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சணல் பொருள் மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தைச் சென்னையில் அமைத்து, புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது அவசியம். சணல் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களின் மேம்பாட் டுக்கு உதவ வேண்டும் என்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x