Published : 05 Jun 2014 09:55 AM
Last Updated : 05 Jun 2014 09:55 AM
கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையின்போது ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநல வழக்கு மைய அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
2009-ல் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வித் துறை 2013 ஏப்.1-ம் தேதி ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஏழைக் குழந்தைகளுக்கு மாண வர் சேர்க்கையில் அனைத்துப் பள்ளி களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை பெரும்பா லான பள்ளிகள் அமல்படுத்த வில்லை. சில பள்ளிகளில் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் களை ஆசிரியர்கள் கவனிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தடுக்க அனைத்து மாவட்டங்களி லும், மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைத்து, 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப் பம் பெற்று, அனைத்து பள்ளிகளி லும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி ஆகியோர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தலைமைச் செயலர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர்கள், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்ட அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT