Published : 08 Oct 2016 10:26 AM
Last Updated : 08 Oct 2016 10:26 AM
வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க மலைவாழ் மக்கள் பரம்பரையாக பயன்படுத்தும் அடி உடுக்கு, குடுக்கை போன்ற மூங்கில் கருவிகளைப் பழமை அழியாமல் ஆவணப்படுத்தும் முயற்சியை ஐ.நா. கலாச்சார அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொண்டுள்ளது.
இயற்கை மாற்றங்கள் மற்றும் வன வாழிடங்கள் அழிப்பு, சுற்றுச் சூழல் தூய்மையைக் கெடுக்கும் ஒலி, மாசு போன்றவற்றால் வன விலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி எல்லையோர கிராமங் களுக்குள் புகுவதும் மனிதர்கள் அச்சமடைவதும் தொடர்கதையாகி வருகின்றன. வன ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள நவீன கருவிகள் பயன்பாட்டில் இருந்தா லும், அவற்றின் ஒலி வன விலங்கு களுக்கு இயற்கைக்கு முரணான சூழலை ஏற்படுத்துகின்றன.
ஆனால், மலைவாழ் மக்கள் தங்களைப் பாதுகாக்க மூங்கிலால் ஆன தற்காப்புக் கருவிகளைப் பரம் பரை பரம்பரையாக தாங்களே தயார் செய்துள்ளனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல மாநிலங் களில் வாழும் மலைவாழ் மக்கள் தங்களது பாதுகாப்புக்கு நம்பகத்தன்மையாக இக்கருவி களையே இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெடு மங்காட்டைச் சேர்ந்த 80 வயதான மாதவன் காணி கூறும்போது, “3 அடியில் இருந்து 4 அடி வரை மூங்கிலில் அடி உடுக்கை செய்யப் படும். இந்தக் கருவி யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளிடம் இருந்து மலைவாழ் மக்களைச் சிறப்பாக பாதுகாக்கிறது. மூங்கிலின் பாதி உட்பகுதி வெட் டப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள பகுதி சரிபாதியாக வெட்டப் பட்டு இருக்கும். இவற்றை அசைக் கும்போது எழும் ஓசை 100 மீட்டர் சுற்றளவுக்கு மேல் காடுகளுக்குள் கேட்கிறது. இதனால் வன விலங்கு கள் எதுவும் குடியிருப்புகளை நெருங்காது.
இதுபோல், 2 அடி நீள மூங்கி லில் இரு புறமும் வில் போன்று கட்டப்பட்டிருக்கும் வலுவான நூல் இழையில் ஒரு குச்சி இணைக்கப் பட்டிருக்கும். அவற்றை இரு புறமும் அசைக்கும்போது மூங்கிலில் படும் குச்சி ஓசை எழுப்புகிறது. இது 30 மீட்டர் வரை ஒலி எழுப்பும் தன்மையுள்ளது. செலவு ஏதுமின்றி சாதாரண மூங்கிலில் செய்யப்படும் இக்கருவிகள், மலைவாழ் மக்களை பாதுகாத்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன” என்றார்.
‘தி இந்து’விடம் பழங்குடியின வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டேவிட் சன் கூறும்போது, “மனிதன் சிறப் பாக வாழ வேண்டும், இயற் கைக்கும் அழிவு ஏற்படக்கூடாது என்பதை ஆதிகால தற்காப்புக் கருவிகள் உணர்த்துகின்றன. காடுகளில் வனவிலங்குகளுக்கு மத்தியில் போராட்ட வாழ்வு நடத்தும் பழங்குடியினர் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள் மற்றும் தற்காப்புக் கருவிகளை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் பரம்பரை அறிவுசார்ந்த நுட்பங்கள் கொண் டவை.
பாதிப்பு இல்லை
அடி உடுக்கு, மூங்கில் குடுக்கை போன்றவை மலைவாழ் மக்களை யும், அவர்களது விவசாயப் பயிர் களையும் காத்து வருகின்றன. அதுமட்டுமின்றி நவீன கால மின் வேலி போன்றவை வனவிலங்கு களைப் பலியாக்குவதுபோல், இக் கருவிகள் விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
இக்கருவிகளில் ஏற்படுத்தும் இயற்கையான ஒலி அதிர்வுகளால் விலங்குகள், பறவைகளுக்குப் பாதிப்பு இல்லை. இவற்றை தயார் செய்ய எந்த முதலீடும் தேவை இல்லை. மூங்கில் கம்பு மட்டுமே போதும். இதுகுறித்து சமீபத்தில் தாய்லாந்தின் சியாங்மாயில் நடந்த ஐக்கிய நாட்டு கல்வி சமு தாய கலாச்சார அமைப்பு (யுனி செஃப்) மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தேன். இந்த மூங்கில் கருவிகளைப் பார்த்து வியந்து போன யுனிசெஃப் அதிகாரிகள், இவற்றை ஆவணப்படுத்துவது அவசியம் என தெரிவித்தனர். தற் போது அதற்கான தகவல்களையும், தொன்மையான ஆதாரங்களையும் திரட்டிக் கொடுத்துள்ளேன்” என்றார்.
மூங்கிலால் ஆன அடிஉடுக்கையை பயன்படுத்தி வரும் குமார்காணி. (அடுத்த படம்) மூங்கில் குடுக்கையை பயன்படுத்தும் சங்கரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT