Last Updated : 24 Oct, 2016 12:52 PM

 

Published : 24 Oct 2016 12:52 PM
Last Updated : 24 Oct 2016 12:52 PM

கூட்டுறவு கடன் விவகார வழக்கு விசாரணையை காண வந்த விவசாயி மாரடைப்பால் மரணம்

அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனுதாக்கல் மீதான விசாரணையைக் காண நீதிமன்றத்துக்கு வந்த விவசாயி ஒருவர் மதுரையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ''5000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த பாகுபாடு தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட வெண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையைக் காண திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்ற வளாகத்துக்குள் கூடியிருந்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின் (40) என்ற விவசாயியும் வந்திருந்தார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள மருந்தகத்தின் ஆம்புலன்ஸ் மூலம் அகஸ்டின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பாகவே அகஸ்டின் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x