Last Updated : 12 Oct, 2016 08:44 AM

 

Published : 12 Oct 2016 08:44 AM
Last Updated : 12 Oct 2016 08:44 AM

ஓட்டுநர்களுக்கு இனி குடை தேவையா?- அரசுப் பேருந்துகளின் பரிதாப நிலை

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநில மக்கள் ஆச்சரியமாக பார்த்தது உண்டு. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ஓட்டை, உடைசலான பேருந்து களும் பயணிகளின் உடைகளை கிழித் தெறியும் கம்பிகள் நீளும் பேருந்துகளும் தமிழகத்தில் அதிகமாக வலம் வரு கின்றன.

நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை முதல் திண்டிவனம் வரை பலத்த மழை பெய்தது. அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்தில் ஓட்டுநர் இருக்கைக்கு நேரே ஒழுகியதால் ஓட்டுநர் ஒரு அட்டையை தலைக்கு மேலை வைத்து கையில் பிடித்தபடி பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார்.

இதுபற்றி அந்த பேருந்து ஓட்டுநரிடம் கேட்டபோது, “நான் பலமுறை பணிமனை ஊழியர்களிடம் தெரிவித்தும் இதுபற்றி அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. ஒவ்வொரு முறையும் பயணிகளின் கோபத்தை நேரடியாக எதிர்கொள்வது நாங்கள்தான். பயணிகளைவிட எங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது” என்றார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி யில் இருந்து கேரள மாநிலம் கொட்டா ரக்கராவுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்தின் உட்புற தரைத்தள பலகை உடைந்து, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்வாதி(30) என்பவர் கீழே விழுந்து காயமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

கடந்த 2011-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் புதுக்கோட் டையில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் பயணித்தபோது பேருந்தில் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் நஷ்டஈடும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் போக்கு வரத்துக் கழக நிர்வாகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்கவில்லை. பேருந்துகள் ஓட்டை உடைசலாகி ஒழுகும் பிரச்சினை அதிக ரித்து வருகிறது. குறைகளை சீரமைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “அனைத்து பேருந்துகளின் கூரைகளிலும் தார்பாய் புதுப்பிக்க வேண்டும் என அந்தந்த பணிமனைகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x