Published : 08 Oct 2016 08:17 AM
Last Updated : 08 Oct 2016 08:17 AM

சென்னை ரேஸ்கோர்ஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ஐயப்பன் முயற்சி

குதிரைப் பந்தயங்களை நடத்தும் சென்னை ரேஸ்கோர்ஸ் தலைவர் பதவியைக் கைப்பற்ற தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் சுவீகார புதல்வர் ஐயப்பன் என்கிற முத்தையா முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை ரேஸ்கோர்ஸ் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நடக்கும். ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் தலைவராக இருந்து வந்தார். கடந்த டிசம்பரில் அவர் காலமானதை அடுத்து, துணைத் தலைவராக இருந்த ஆர்.ராமகிருஷ்ணன் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைவர் பதவியைக் கைப்பற்ற தற்போது ஐயப்பன் தீவிர முயற்சியில் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ரேஸ்கோர்ஸ் நிர்வாக கமிட்டிக்கு தேர்தல் மூலம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

மேலும், அரசால் நியமிக்கப்படும் 4 உறுப்பினர்களும் இருப்பார்கள். நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் இருந்து தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரேஸ்கோர்ஸ் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான முருகப்பன், கணபதி, பாலமுகுந்ததாஸ், காந்தி ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த 4 இடங்களுக்கான தேர்தல் கடந்த செப்டம்பரில் நடைபெறுவதாக இருந்தது.

இதையொட்டி, வாக்குரிமை பெற்ற ரேஸ்கோர்ஸ் உறுப் பினர்களிடம் தனக்காகவும் தன் தரப்பு வேட்பாளர்களான ரவி, செந்தில்நாதன், சாதுரெங்க அர்ஸ் ஆகியோருக்காகவும் ஆதரவு திரட்டினார் ஐயப்பன். இவருக்கு போட்டியாக எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளையின் தலைவரும் ஸ்பிக் குழுமத் தலைவருமான ஏ.சி.முத்தையாவும் ஒரு அணியை நிறுத்தி, தலைவர் பதவியை தன் பக்கம் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏ.சி.முத்தையாவிடம் கேட்டபோது, “இதற்கு முன்பு நிர்வாக கமிட்டியில் இருந்த ஐயப்பன் 2013-ல் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது மீண்டும் போட்டிக்கு வருகிறார். எம்.ஏ.எம். இருந்தபோது, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருந்தது.

தகுதியற்றவர்கள், இறந்தவர் கள் பெயர்கள் எல்லாம் பட்டி யலில் இருந்ததால் அவற்றை நீக்கிவிட்டு தகுதியான உறுப் பினர்களை மட்டுமே வைத்து தேர்தலை நடத்த தீர்மானித் துள்ளனர்.

அப்படிப் பார்த்தால் சுமார் 600 உறுப்பினர்கள்தான் இருப்பார்கள்.

தேர்தல் ஒத்திவைக்கப் பட்டாலும் உறுப்பினர்களுக்கு ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். எங்கள் தரப்பில் யாரை நிறுத்துவது, ஆதரிப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x