Last Updated : 18 Aug, 2022 07:52 PM

 

Published : 18 Aug 2022 07:52 PM
Last Updated : 18 Aug 2022 07:52 PM

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசி கைதான 9 பேரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோரி மனு

மதுரை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான 9 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டி ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரை விமான நிலையத்திற்கு ஆக. 13-ல் கொண்டுவரப்பட்டது. உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி செல்லும் போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது விமான நிலையத்தில் நின்றிருந்த பாஜகவினர் காலணியை வீசினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஜெயகர்ணா, கோபிநாத், குமார், மற்றொரு கோபிநாத், ஜெயகுமார், பாலா, சரண்யா, தனெலெட்சுமி, தெய்வானை உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் ஜாமீன் கேட்டு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதித்துறை நடுவர் மாலதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 9 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 22-க்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x