Published : 18 Aug 2022 01:59 PM
Last Updated : 18 Aug 2022 01:59 PM
திருநெல்வேலி: பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.
தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் நெல்லை கண்ணனுக்கு வழங்கப்பட்டிருந்தது. கங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் நட்புறவில் இருந்தவர்.
மறைந்த நெல்லை கண்ணனின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது குறித்தும், இறுதி சடங்கு நடைமுறைகள் குறித்தும் அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருகின்றனர். மறைந்த பேச்சாளர் நெல்லை கண்ணன் தமிழ்க்கடல் என்ற அடைமொழியில் அழைக்கப்படுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT