Published : 18 Aug 2022 07:15 AM
Last Updated : 18 Aug 2022 07:15 AM

திண்டுக்கல் | கூட்டுறவு துறையில் 4,500 பேர் விரைவில் நியமனம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல்: கூட்டுறவுத் துறையில் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சித்தரேவு கிராமத்தில் மக்களை தேடி முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் வரவேற்றார்.

3,747 பயனாளிகளுக்கு ரூ 7.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: கடந்த ஆட்சியில் ஆத்தூர் தொகுதியில் பலருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஓராண்டில் 2,500 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய துணைத் தலைவர் ஹேமலதா, ஆத்தூர் வட்டாட்சியர் சரவணன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x