Published : 18 Jun 2014 09:52 AM
Last Updated : 18 Jun 2014 09:52 AM
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழகத் தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி):
இலங்கையில் போதுபாலசேனா என்னும் அமைப்பைச் சேர்ந்த புத்தத் துறவிகள் நடத்திய தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி. மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சிறுபான் மையின மக்களைக் காக்க வேண்டும். சிங்கள பவுத்த கும்பலின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
பழ.நெடுமாறன் (உலகத் தமிழர் பேரவை):
இலங்கையில் சிங்கள பவுத்தத் துறவிகளின் தாக்குதலில் 3 முஸ்லிம் கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர் களின் சொத்துக்களும் சேதமடைந் துள்ளன. முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடுத்து ஈழத் தமிழர்கள், இப்போது முஸ்லிம்கள் என சிங்களர் கள் அடுத்தடுத்து குறி வைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர். ஐ.நா. படையை இலங்கைக்கு அனுப்பினால்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற முடியும். இதற்கான முயற்சியில் உலக சமுதாயம் ஈடுபட வேண்டும்.
எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்):
இலங்கையில் உள்ள தர்கா நகர், அரந்தமை, பேருவலை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் மீது பவுத்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே இன்னும் ஆறாமல் உள்ள நிலையில், இந்த சம்பவம் முஸ்லிம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (எஸ்டிபிஐ கட்சி):
இலங்கையில் முஸ்லிம்களின் கடைகள், பள்ளிவாசல்கள் தாக்கப் பட்டு 3 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை யின் இந்த இனவெறி தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கும் எஸ்டிபிஐ மாநில தலைவரால் கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப் பட்டுள்ளது.
சதாம் என்கேஎன் சதகத்துல்லாஹ் (அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்):
இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது போதுபாலசேனா என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதைப் பார்க்கும் போது, ராஜபக்சே அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு தயாராகி வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆரம்பத் திலேயே அடக்கி, முஸ்லிம் சமுதாயத் தினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT