Published : 04 Oct 2016 09:25 AM
Last Updated : 04 Oct 2016 09:25 AM
திமுக போட்டி வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக தேர்தல் பணியாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் பட்டியலை அனுப்புமாறு அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கிராமப் பஞ்சாயத்துகளை தவிர்த்து, மற்ற பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது. திமுகவில் வாய்ப்பு கிடைக்காத சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை உள்ளிட்ட பல இடங்களில், திமுகவுக்கு போட்டியாக சிலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மாற்றுக் கட்சியினருடன் இணைந்து திமுக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் பணியிலும் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கட்சி தலைமைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.
இதுகுறித்து விசாரித்து உடனே நட வடிக்கை எடுக்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட வாரியாக நியமிக்கப் பட்ட திமுக பொறுப்பாளர்கள் தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கண்ணதாசன் பங்கேற்று பேசுகையில், மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விளக்கம் அளித்தார். ராமநாத புரத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரான மதுரை முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு பேசினார்.
இதுகுறித்து பெ.குழந்தைவேலு கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெற்றிக்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தினமும் கட்சித் தலைமையிலிருந்து பல உத்தரவுகள் வருகின்றன. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்பவர்களை அழைத்து சமாதானம் பேசி, மனுக்களை வாபஸ் பெறச் செய்ய வேண்டும். இதை ஏற்காதோர் குறித்து பொறுப்பாளர்கள் புகாராக அனுப்ப வேண்டும். இதேபோல திமுக வேட்பாளருக்கு எதிராகவும், மாற்றுக் கட்சியினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றி திமுக தோல்விக்கு காரணமாக இருப்பவர்கள் குறித்தும் ஆதாரங்களுடன் புகார் அனுப்ப வேண் டும். இவர்களை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படவுள்ளது.
இதற்காக, போட்டி வேட்பாளர்கள் குறித்து சேகரித்து வருகிறோம். வரும் 6-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறும் காலக்கெடுவுக்கு பின்னரும் போட்டியில் ருந்து விலகாதோர், எதிர்த்து தேர்தல் பணியாற்றுவோர் குறித்து கட்சி தலை மைக்கு பட்டியல் அனுப்புவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT