Published : 15 Aug 2022 09:15 AM
Last Updated : 15 Aug 2022 09:15 AM
சென்னை: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா்
முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில் வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு `தகைசால் தமிழர்' விருது வழங்கினார். அதேபோல, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருது, நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த எழிலரசிக்கு கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவர், நிறுவனங்களுக்கும் விருதுகளை வழங்கவுள்ளார்.
மேலும், முதல்வரின் இளைஞர் விருதுகள், கரோனா தடுப்பு சிறப்பு பதக்கம், சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான விருது, வீர தீர செயலுக்கான விருது உள்ளிட்டவற்றையும் முதல்வர் வழங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT