Published : 15 Aug 2022 06:05 AM
Last Updated : 15 Aug 2022 06:05 AM
சென்னை: தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு சிறந்த பொதுசேவைக்கான முதல்வரின்பதக்கம், புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளின் சீரிய பணியை பாராட்டி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல் சட்டம் - ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கடலூர் தனிப் பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வாளர் க.அம்பேத்கர், சென்னை பெருநகர காவல் அடையாறு போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சு.சிவராமன், மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்புஉதவி ஆய்வாளர் வை.பழனியாண்டி, தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மா.குமார் ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
புலன் விசாரணை பணியில் மிக சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும், ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும் 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான முதல்வரின் சிறப்புபணி பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையர் கோ.ஸ்டாலின், சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ச.கிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை காவல் ஆய்வாளர் மா.பிருந்தா, நாமக்கல் சிபிசிஐடி ஆய்வாளர் அ.பிரபா,சென்னை மாநகர காவல் கோடம்பாக்கம் ஆய்வாளர் வீ.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மா.சுமதி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் ஆய்வாளர் சி.நாகலட்சுமி, சென்னை பெருநகர பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் வெ.துளசிதாஸ், சென்னை சிபிசிஐடி ஓசியு-1 உதவி ஆய்வாளர் ச.ல.பார்த்தசாரதி, சென்னை அடையாறு மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் கா.இளையராஜா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
விருதுகள் பெறுவோருக்கு தலா 8 கிராம் தங்கப் பதக்கம் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுவழங்கப்படும். இந்த விருதுகளை முதல்வர் வேறொரு விழாவில் வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT