Published : 03 Oct 2016 12:36 PM
Last Updated : 03 Oct 2016 12:36 PM

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வா கிகள் பலர், தங்களின் வாரிசுகளை களமிறக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் கவுன்சிலர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதில் பழைய முகங்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் தங்கள் வார்டு களை இழந்த சிலர், தங்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் பெற்றுள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி மேயரா கவும், அதிமுக மாவட்டச் செய லாளராகவும் இருக்கும் வி.மருத ராஜ், இந்த தேர்தலில் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட் டதையடுத்து, தனது மகள் பொன்முத்துவை போட்டியிட வைத்துள்ளார்.

அதிமுக அதிக இடங்களை வென்று மேயர் பதவியை பொன் முத்து கைப்பற்றும் பட்சத்தில், அவருக்கு உதவுவதற்காக தனது மகன் வீரமார்பனையும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவைத்துள்ளார். அதோடு, பொன்முத்து தோற்று விட்டாலும்கூட மேயர் பதவி தனது குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கில், தனது தம்பி மருமகள் நந்தினிதேவியையும் கவுன்சிலர் பதவிக்கு வி.மருதராஜ் போட்டியிடவைத்துள்ளார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்ற னர்.

வாரிசுகள் பட்டியல்

வி.மருதராஜை போன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர், தங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் சீட் பெற்றுள்ளனர். அமைச்சர் சீனிவாசன், தனது தம்பி நாராயணனை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவைத்துள்ளார்.

பழநி ஒன்றியத் தலைவராக உள்ள ஏ.டி.செல்லச்சாமி, தனது மகன் சிவராஜ்குமாரை பழநி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வைத்துள்ளார். ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா ளராக உள்ள பாலசுப்பிரமணியன், தனது மனைவியும், தற்போ தைய நகராட்சித் தலைவரு மான பழனியம்மாளை மீண்டும் களமிறக் கியுள்ளார். இவர்களது மருமகள் சுதந்திராதேவி ஒட்டன்சத்திரம் ஒன்றிய கவுன்சிலருக்கு நிறுத்தப் பட்டுள்ளார்.

விஸ்வநாதனின் ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனின் பதவி பறிப்புக்கு பிறகு அமைதிகாத்து வந்த அவ ரது ஆதரவாளர்கள் பலருக்கு, உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டியிட்டபோது அவருக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றிய பி.கோபிக்கு மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டத்தில் விஸ்வ நாதன் ஆதரவாளர்கள் பலர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த முறை வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் அமைச்சர் சி.சீனிவாசன் தலையிடவில்லை என்றும், மாவட்ட செயலாளர், ஒன்றியச் செயலாளர் பரிந்துரைத்த நபர்களுக்கே பெரும்பாலும் சீட் கிடைத்துள்ளது.

கோஷ்டி பூசலை தவிர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவா ளர்களாக இருந்தாலும், அவர்க ளுக்கும் சீட் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x