Published : 26 Oct 2016 10:13 AM
Last Updated : 26 Oct 2016 10:13 AM
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட் டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உற்பத்தி முடிக்கப்பட்டு பட்டாசு ஆலைகள் நாளை முதல் அடைக்கப்படுகின்றன.
சிவகாசியிலும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று 178 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. அதேபோல், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று 152 பட்டாசு ஆலைகளும், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று 437 ஆலைகளும் செயல்படுகின்றன. நாட்டின் மொத்த தேவையில் 90 சதவீதம் பட்டாசு உற்பத்தி, சிவகாசியில் உள்ள ஆலைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
இறுதிக் கட்டம்
இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மத்தாப்பு தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வெளி மாவட்டங் களுக்கு லாரிகளில் பட்டாசுகளை அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.
உற்பத்தி நிறுத்தம்
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்றுடன் உற்பத்தி முடிக்கப்பட்டு, மாலை தொழிலாளர்களுக்கு போனஸ், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கப்படும். நாளை முதல் ஆலைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 2 மாதங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி தொடங்கும்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “கடந்த ஆண்டு வட மாநிலங்களில் சீனப்பட்டாசு ஆதிக் கத்தால் சிவகாசி பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. தற்போது அதை விற்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு குறைவான உற்பத்தியே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு வடமாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் ஆர்டர் கிடைக்கவில்லை. மேலும், பொரு ளாதார நிலையும் பட்டாசு உற் பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்ற தாக இல்லை. எங்களைப் பொறுத்த வரை இந்த ஆண்டு விற்பனை அதிக அளவில் இல்லை; சராசரி யாகத்தான் உள்ளது” என்றனர்.
சீன பட்டாசுகளை அழிக்க வேண்டும்
சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவுக்குள் பெருமளவில் கள்ளத்தனமாக ஊடுருவியிருக்கும் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகளைக் கண்டறிந்து, அவற்றை இறக்குமதி செய்தவர்கள், இருப்பு வைத்திருப்பவர்கள், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகளை அழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.
மேலும், இந்திய பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, நம் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி பட்டாசு ஏற்றுமதிக்கு இந்திய அரசு உதவினால் முதல் 5 ஆண்டுகளிலேயே ரூ.10 ஆயிரம் கோடியாக பட்டாசு உற்பத்தி பெருகி, பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT